ETV Bharat / state

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி

author img

By

Published : Dec 20, 2022, 5:49 PM IST

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி

சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் உறுப்பினரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வீட்டிற்குச் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் சங்கரய்யா தெரிவித்தார்.

சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கு.பாலகிஷ்ணன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.