ETV Bharat / state

தமிழ்நாட்டின் நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவு

author img

By

Published : Nov 9, 2022, 6:50 AM IST

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை, வனத்துறை தலைமை அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நேற்று (08.11.2022) கூட்டம் நடைபெற்றது.

இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான வனப்பகுதி சாலைகளை மேம்படுத்தி தருமாறு தெரிவித்துள்ள கோரிக்கைகளை அலுவலர்கள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவற்ற உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, பசுமை தமிழக இயக்கத்தின் மூலம் நடப்பாண்டு, முதல் கட்டமாக 360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள் என அமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் மாவட்ட வன அலுவலர்கள் மாநாட்டின் போது பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு பணிகள், வனவிலங்குகள்-மனித மோதல்கள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டமன்ற அறிவிப்புகள் உரிய காலத்தில் நிறைவேற்ற தேவையான பணிகளை அலுவலர்கள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதனை நிறைவேற்றிட வனத்துறையின் ஆணிவேர்களாக உள்ள மாவட்ட வன அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களுக்கு சரியான முன்மொழிவுகளை அனுப்பி வைத்து நிதி ஒதுக்கீடு பெற்று குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வனப்பணியாளர்களுக்கான இரண்டு சக்கர மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்தல், ரூ.16 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா பணிகள், வனவிலங்குளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் நிவாரன நிதியை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

ரூ.3.6 கோடியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மேம்பாட்டு பணிகள், ரூ.5.2 கோடியில் சோலைகக்காடுகள் பாதுகாப்பு மையம் தொடங்குதல், ரூ.32 கோடியில் வனத்துறை மேலாண்மைப் பணிகள் செயலாக்கம், அகஸ்தியர் மலையில் யானைகள் காப்பகம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கடற்பசு காப்பகம், தேவாங்கு சரணாலயம், ஆமைகள் பாதுகாப்பு மையம் போன்ற சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.