ETV Bharat / state

வாங்காத பொருட்களுக்கு பில்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வார்னிங்!

author img

By

Published : Apr 29, 2023, 12:37 PM IST

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரேசன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
ரேசன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாட்டில் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய PoS எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் மூலம், குடும்பத்தில் உள்ள நபர்களில் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் போது குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருள்களுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அறிவுரைகளுக்கு முரணாக குடும்ப அட்டைதாரர்கள் வாங்காமலேயே வாங்கியதாக பில் போடப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கப்படும் நிகழ்வுகளில் அந்த நியாய விலை கடை பணியாளர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு அலுவலர்கள் நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது கடையில் இணைக்கப்பட்டுள்ள 10 குடும்ப அட்டைதாரர்களை நேரிலோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெற வேண்டும். அப்போது வாங்கிய பொருள்களுக்கு மட்டும் குறுந்தகவல் வந்துள்ளதா? அல்லது வாங்காத பொருட்களுக்கும் பில் போடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அந்த ஆய்வின் போது போலி பில் போடப்பட்டதைக் கண்டறியும் நேர்வுகளில் அந்த நியாய விலை கடை பணியாளர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என ஆய்வு அலுவலர்களுக்கு வலியுறுத்த வேண்டும் எனக் கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தென்காசியில் கழுத்தில் பாம்புடன் டீ குடிக்க வந்த ஸ்நேக் பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.