ETV Bharat / state

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால்... - எச்சரித்த மின்வாரியம்!

author img

By

Published : Jun 29, 2022, 10:14 PM IST

ஊழியர்கள் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்

சென்னை: சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் உள்ள பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள் ஃபார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழ்நாடு, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். ஆனால், கேசுவல் உடை அணியக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும். பட்டன் இல்லாத கோட் அணிய ஊழியர் விரும்பினால் கண்டிப்பாக டை அணிய வேண்டும்.

அந்த உடையின் நிறமும், டிசைனும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை, சல்வார் போன்றவற்றை அணியலாம் எனத் தெரிவித்துள்ளது.
அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: நளினி மனு மீதான தீர்ப்பில் அரசுதரப்பு வாதத்தை திருத்திப்பதிவிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.