ETV Bharat / state

ஒரே கட்ட தேர்தல்.. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 8:48 AM IST

TN CEO Satyaprada Saku: ஒரே கட்ட தேர்தல் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு "தற்போது அதைப் பற்றிச் சொல்ல இயலாது" என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் அளித்துள்ளார்.

TN CEO Satyaprada Saku
ஒரே கட்ட தேர்தல் தொடர்பாக தற்போது சொல்ல இயலாது - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

ஒரே கட்ட தேர்தல் தொடர்பாக தற்போது சொல்ல இயலாது - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், “ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என 4 தென் மாநிலங்கள், பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர் என 3 யூனியன் பிரதேசங்களுக்கான 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் பட்டியல், எலெக்ட்ரால் ரோல் எல்லாம் எப்படி தாயார் செய்துள்ளது, மக்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது, அரசியல் கட்சியினருக்கு எப்படி விழிப்புணர்வு கொடுத்துள்ளோம், வாக்குப்பதிவு இயந்திரம் எல்லாம் முறையாக இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் ரிவியூ செய்தார்கள்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் எல்லாம் வந்துள்ளது. இயந்திரங்கள் முதல் நிலை ஆய்வு செய்யப்பட்டு, எல்லாம் தயார் நிலையில் உள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் மற்றும் திருத்தம் செய்யலாம். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவோம். அதுவரை மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம். வீடியோ மூலமாகவோ, மைக்ரோ அப்சர்வர், சி.ஏ.பி.எப் என 4 முறைகள் மூலம் வாக்குச் சாவடிகள் கண்காணிக்கப்படும்.

தேர்தல் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. என்ன வசதி இருக்குமோ, அதன் அடிப்படையில் கண்காணிப்போம். சட்ட ஒழுங்கை பொறுத்தவரை தமிழகம் பிரச்னை இல்லாத மாநிலம். இதை எல்லாம் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஒரே கட்ட தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "தற்போது அதைப் பற்றிச் சொல்ல இயலாது' என பதிலளித்தார்.

இதைஒயும் படிங்க: "இது எங்க நிலம்... எங்க இடம்... விட்டுப்போக மாட்டோம்..." - அழுத்தமான வசனங்களுடன் கருப்பர் நகரம் டீஸர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.