ETV Bharat / state

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மாவட்ட வாரியாக வாக்காளர்கள் முழு விவரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:25 PM IST

Tamil nadu Voters list: தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

தமிழக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
தமிழக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று (அக்.27) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண்கள் 3.10 கோடி பேர், ஆண்கள் 3 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளனர். மேலும் தமிழகத்தில், அதிகமாக வாக்காளர்கள் இருக்கும் சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்" என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம் (வரைவு)

மாவட்டம்ஆண் வாக்காளர்கள்பெண் வாக்காளர்கள்மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்த எண்ணிக்கை
சென்னை19,01,91119,65,1491,11838,68,178
காஞ்சிபுரம் 6,44,802 6,79,59718213,24,581
செங்கல்பட்டு12,95,17113,16,92444126,12,536
திருவள்ளூர்16,47,94316,86,12372033,34,786
திருவண்ணாமலை10,06,65810,46,84211820,53,618
வேலூர் 6,08,6396,48,51516212,57,316
விழுப்புரம்8,15,9678,33,65720816,49,832
கள்ளக்குறிச்சி5,46,9385,42,85522810,90,021
திருப்பத்தூர்4,59,9454,72,7431189,32,806
இராணிப்பேட்டை4,97,7215,24,5429110,22,354
அரியலூர்2,53,5342,53,880115,07,425
மயிலாடுதுறை3,65,7353,72,128207,37,883
நாகப்பட்டினம்2,65,4722,75,926245,41,422
பெரம்பலூர்2,76,4912,86,00085,62,499
புதுக்கோட்டை6,51,5596,64,1756413,15,798
தஞ்சாவூர்9,74,89610,25,98815620,01,040
திருச்சிராப்பள்ளி10,98,75911,64,08132922,63,169
திருவாரூர்5,06,6895,29,5186510,36,272
தருமபுரி6,21,8226,05,31916112,27,302
திண்டுக்கல்8,95,4839,45,13521318,40,831
கோயம்புத்தூர்14,96,77015,51,66556930,49,004
கரூர்4,20,3134,52,043678,72,423
ஈரோடு9,45,48710,01,23916019,46,886
கிருஷ்ணகிரி7,96,5837,88,78229015,85,655
நாமக்கல்6,88,4407,31,01019314,19,643
நீலகிரி2,74,0052,96,610175,70,632
சேலம்14,41,71714,50,62127128,92,609
திருப்பூர்11,37,32111,78,45533523,16,111
கன்னியாகுமரி7,61,8337,60,06314015,02,236
மதுரை12,97,19913,43,16923326,37,601
இராமநாதபுரம்5,73,4625,78,7716911,52,302
சிவகங்கை5,73,2915,93,3185111,66,660
தேனி5,39,5125,61,90319311,01,608
தூத்துக்குடி6,97,9457,26,59321014,24,748
திருநெல்வேலி6,69,4906,99,09613213,68,718
தென்காசி6,38,7316,64,17615513,03,062
விருதுநகர்7,48,4467,81,86023015,30,536

மேலும் வயது வாரியாக, 40 முதல் 49 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். (1,37,63,488 வாக்காளர்கள்). 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 3,94,909 பேர்கள் உள்ளனர். 100 வயதை கடந்து இருக்கும் வாக்காளர்கள் 16,300 பேர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தமிழக்த்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 3,00,68,610 பேர்கள், அதேப்போல் பெண் வாக்காளர்கள் 3,10,54,571 பேர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 8016 பேர்கள் என 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளா் பட்டியலில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனதளவில் அன்றே ஓய்வு பெற்றுவிட்டேன்.. 2019 உலகக் கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.