ETV Bharat / state

கருணாநிதி நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 3:53 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் 26ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கம்ல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயராகி வரும் கருணாநிதி நூற்றாண்டு விழா
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயராகி வரும் கருணாநிதி நூற்றாண்டு விழா

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுகவினர் சார்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 'கருணாநிதி 100' என்னும் விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

அதனைத்தொடர்ந்து, தமிழ் சினிமா மற்றும் கலை உலகில் கருணாநிதியின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில், கருணாநிதியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கான ஒப்புதலும் பெறப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது. தமிழ்த் திரையுலகில் கருணாநிதியின் பங்களிப்பு மிகப் பெரியது. அவரது எழுத்துக்களால் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தி மக்களை பல்வேறு வழிகளில் புரட்சியாளராக மாற்றிய பெறுமையும் வரலாறும் உண்டு.

பராசக்தி, நாம், பூம்புகார் போன்ற இவர் வசனம் எழுதியப் படங்கள், தமிழ் சினிமாவில் இப்படியொரு வசனங்கள் எழுதுவதற்கு கருணாநிதியே இனிப் பிறந்து வந்தால் தான் அது சாத்தியமாகும் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது பங்களிப்பை போற்றும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் மாதம் 24ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நடிகர் ரஜினிகாந்ததின் வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த்-ம் உறுதி அளித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதேப்போல் நடிகர்‌ கமல்ஹாசனையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினரின் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்! இன்று வெளியாகிய படங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.