ETV Bharat / state

சாலையைக் கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் கார் மோதி மரணம்

author img

By

Published : Oct 19, 2021, 10:24 AM IST

சென்னையில் சாலையைக் கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலை விபத்து  கார் மோதி விபத்து  சென்னையில் உதவி ஆய்வாளர் கார் மோதி உயிரிழப்பு  உதவி ஆய்வாளர் கார் மோதி உயிரிழப்பு  உதவி ஆய்வாளர் உயிரிழப்பு  விபத்து  சென்னை செய்திகள்  சென்னை விபத்து செய்திகள்  அண்மை செய்திகள்  chennai news  chennai latest news  accident  road accident  car accident  sub inspector dead by car accident  sub inspector  chennai sub inspector dead by car accident
விபத்து

சென்னை: விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (26). இவர் சென்னை காமராஜர் சாலை காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் உள்ள டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 18) இரவு பணி முடிந்து வீடு திரும்புவதற்காக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா, சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பிரசன்னா மீது மோதியது. இதில் பிரசன்னா தூக்கி வீசப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், சுயநினைவின்றி கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரசன்னா முன்னதாகவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சாலை விபத்து  கார் மோதி விபத்து  சென்னையில் உதவி ஆய்வாளர் கார் மோதி உயிரிழப்பு  உதவி ஆய்வாளர் கார் மோதி உயிரிழப்பு  உதவி ஆய்வாளர் உயிரிழப்பு  விபத்து  சென்னை செய்திகள்  சென்னை விபத்து செய்திகள்  அண்மை செய்திகள்  chennai news  chennai latest news  accident  road accident  car accident  sub inspector dead by car accident  sub inspector  chennai sub inspector dead by car accident
பறிமுதல்செய்யப்பட்ட வாகனம்

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, காரை ஓட்டிவந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் கைதுசெய்து, அவரிடமிருந்து காரைப் பறிமுதல்செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.