ETV Bharat / state

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ரோஸ் மில்க் கடை ஊழியரை தாக்கியவர்கள் சரண் உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:57 PM IST

Chennai crime news: சென்னை அண்ணா நகர் ரோஸ் மில்க் கடை தகராறு முதல் முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரை சென்னையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களின் தொகுப்பு

முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்
முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

அண்ணா நகர் ரோஸ் மில்க் தகராறு: சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட் (Kora Food Street) என்கிற காம்ப்ளக்சில் "காமதேனு" என்கிற ரோஸ் மில்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடைக்கு நேற்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று சென்று ரோஸ் மில்க் ஆர்டர் செய்துள்ளனர்.

ஆனால் ஆட்ரர் செய்த ரோஸ் மில்க் வர தாமதமானதாக கூறி, கடையில் பணிபுரியும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தட்டி கேட்ட அக்கடையின் காசாளர் கணேசன் என்பவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

அதனை அடுத்து கடையின் காசாளர் கணேசன் என்பவர், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கடை ஊழியர்களை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று (நவ.14) இரவு ரோஸ் மில் கடை ஊழியர்களை தாக்கிய ஜெட்ஸ்சன், சசிகுமார், தென்றல் ஆகியோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

காவல் நிலையத்தில் சரணடைந்தவர்கள்
காவல் நிலையத்தில் சரணடைந்தவர்கள்

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ரோஸ் மில்க் குடிப்பதற்கு கடைக்குச் சென்றதாகவும், அப்போது கடையின் ஊழியர் மீது தெரியாமல் மோதிய போது, கடையின் காசாளர் கணேசன் அவர்களை ஆபாசமாக பேசி அடித்ததாகவும், பின்னர் அதற்காக இவர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், இலவசமாக ரோஸ் மில்க் கேட்டோ, ரோஸ் மில்க் வர தாமதமானதாலோ கடையில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பது தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் இரண்டு இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் அந்த மர்ம நபர் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது. பின்னர் செல்போன் என்னை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொடர்பு கொண்ட மர்ம நபர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. அதனை அடுத்து நத்தம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 78 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும், அது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சொந்தமானது என நினைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரவாயல் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.