ETV Bharat / state

மின் வாரிய கள உதவியாளர் பணிக்கு சிறப்பு பயிற்சி!

author img

By

Published : Apr 2, 2021, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 2,900 கள உதவியாளர் பணிக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கம்பம் ஏறும் பயிற்சி இன்று (ஏப்ரல் 2) அளிக்கப்பட்டது.

Field Assistant job
Field Assistant job

தமிழ்நாடு மின் துறையில் காலியாக உள்ள 2,900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனேவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்வு ஏப்ரல் 18 அல்லது 19 அன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பெரம்பூரில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு நேற்றைய தினம் (ஏப்.1) தொடங்கியது. இதில் சுமார் 200 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். அவர்களுக்கு இன்று (ஏப். 2) கம்பம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில், "இந்த பயிற்சி கள உதவியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பயிற்சியினால் தகுதியான நபர்கள், உடற்தகுதித் தேர்வு, கம்பம் ஏறும் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.