ETV Bharat / state

வரும் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடக்கம் - சபாநாயகர்

author img

By

Published : Dec 26, 2022, 9:21 PM IST

2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி தொடங்குகிறது எனவும், சட்டசபையில் புதிய அமைச்சர் உதநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

உதயநிதிக்கு சட்டசபையில் முதல் வரிசையில் இருக்கை - சபாநாயகர் அப்பாவு
உதயநிதிக்கு சட்டசபையில் முதல் வரிசையில் இருக்கை - சபாநாயகர் அப்பாவு

சென்னை: தலைமைச் செயலகத்தில் 2023ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும் அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பான கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அவர்களுக்கு குறிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால், அதே நிலை தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படும் எனவும்; தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு நடுவில் உள்ள இருக்கையில் புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அமர்வார் எனவும் கூறினார்.

அரசு தரப்பில் விசாரணை ஆணையம் அறிக்கைகளை பேரவைகள் நிறைவேற்றித் தருமாறு கூறினால் அந்த ஆணைய அறிக்கைகளை சட்டப்பேரவைகளில் வைத்து நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; எனினும் இது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்குக'' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.