ETV Bharat / state

எஸ்.பி.பி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்!

author img

By

Published : Aug 24, 2020, 1:04 PM IST

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனாவிலிருந்து மீண்டார் எனப் பரவிய தகவல் பொய் என அவரது மகன் சரண் மறுப்புத்தெரிவித்துள்ளார்.

SPB is coming off a series of treatments - Charan puts an end to rumors!
SPB is coming off a series of treatments - Charan puts an end to rumors!

இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், ' இன்று எனது தந்தை கரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவியது, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை குறித்த தகவல்களுக்கு நானே பொறுப்பு ஆவேன். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்படவில்லை. இப்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கூடிய விரைவில் குணமடைவார் என நாங்கள் நம்புகிறோம்.

அதனால் தயவுசெய்து, எனது தந்தை குறித்து பரப்பப்படும் எந்தவொரு வதந்தியையும் நம்பாதீர்கள். ஒவ்வொரு நாளும் நான் உரிய மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு, எனது தந்தையின் உடல்நலம் குறித்த தகவலை உங்களிடம் பகிர்கிறேன். அதுவரை, பொறுத்திருங்கள்' என உருக்கமாகத் தெரிவித்தார்.

எஸ்.பி.பி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.