ETV Bharat / state

கரோனா: ரயில்வே தென் மண்டல மேலாளர் அலுவலகம் மூடல்

author img

By

Published : May 28, 2020, 5:29 PM IST

சென்னை:கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் உள்ள தென் மண்டல பொது மேலாளர் அலுவலகம், கோட்ட மேலாளர் அலுவலகம் அகியவை மூடப்பட்டுள்ளன.

ரயில்வே தென் மண்டல மேலாளர் அலுவலகம்
ரயில்வே தென் மண்டல மேலாளர் அலுவலகம்

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ராஜதானி ரயில், ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஆகியவை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த சில நாள்களாக குறைந்த அளவு பணியாளர்களுடன் ரயில்வே அலுவலகம் இயங்கிவந்தது. இந்நிலையில், அலுவலகத்தின் பணியாளர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தென் மண்டல பொது மேலாளர் அலுவலகம், சென்னை கோட்ட மேலாளர் அலுவலகம் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

கோட்ட மேலாளர் அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில் பணியாற்றிய ரயில்வே பாதுகப்புப் படை வீரர் ஒருவருக்கு கடந்த வாரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இதனைதொடர்ந்து அந்த அலுவலத்தில் பணிபுரிந்த வேறு சில ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது, மூத்த அலுவலர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அலுவலகம் மூடப்பட்டதாகவும், முதல் நபருக்கு பாதிப்பு ஏற்படும் போதே இது போன்று நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் கரோனா தொற்று காரணமாக ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மது பாட்டில்களின் புகைப்படத்தை பதிவேற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.