ETV Bharat / state

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை

author img

By

Published : Sep 22, 2022, 8:50 PM IST

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் நாளை (செப்.23) மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat  சென்னையில் நாளை மின் தடை
Etv Bharat சென்னையில் நாளை மின் தடை

சென்னை: மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (செப்.23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரம்பூரில் பெரியார் நகர் 1, 2, 3, 4 ஆவது தெருக்கள், சந்திரசேகர் சாலை, கந்தசாமி சாலையில் மின்தடை செய்யப்படும்.

தாம்பரத்தில் பம்மல் அன்னை தெரசாதெரு, தென்றல்நகர், கணபதிநகர், ஈபி காலனி, மரியன்தெரு, ராஜா கீழ்ப்பாக்கம் மாருதிநகர், பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், கற்பகம் அவன்யூ, சாம்ராஜ்நகர் 8வது தெரு, கடப்பேரி ஆர்பி.ரோடு பகுதி, அண்ணாசாலை, காயத்ரி நகர் ,வினோபோஜி நகர், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் பகுதி மற்றும் இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.

மேலும் பொன்னேரியில் மாதர்பாக்கம், மாநெல்லூர், கண்ணம்பாக்கம், ஈகுவர்பாளையம், என்.எஸ்.நகர், ராசசந்திராபுரம், 33 கி.வோ. மத்சயநாயகி இரும்பு கம்பெனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழைய நட்பை புதுப்பிக்க விருப்பமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.