ETV Bharat / state

வருங்கால தலைமுறைகள் நிலவை ஆய்வு செய்யவே சந்திராயன்-3: விஞ்ஞானி ராஜராஜன் புகழாரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:34 PM IST

சந்திரயான்-3 வெற்றிக்கான கருத்தரங்கு மற்றும் மானவர்களுடான கலந்துரையாடல் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று (அக்.16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானி ராஜராஜன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

சந்திரயான்-3 வெற்றிக்கான கருத்தரங்கு
சந்திரயான்-3 வெற்றிக்கான கருத்தரங்கு

சென்னை: சந்திரயான்-3 வெற்றிக்கான கருத்தரங்கு மற்றும் மானவர்களுடான கலந்துரையாடல் அண்ணா பல்கலைகழகத்தில் இன்று (அக்.16) நடைபெற்றது. இதில் சந்திரயான்-3 திட்டத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதற்கு முன்னதாக பேசிய பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், சந்திரயான் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளை பாராட்டியும், சந்திரயான்-3 திட்டம், ஆய்வு படிப்பாகவும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய விஞ்ஞானி ராஜராஜன், "சந்திராயன்-3 என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. சந்திரயான்-3 வெற்றி என்பது, சந்திராயன்1 மற்றும் 2 ஆகியவை வெற்றி தான் சந்திரயான்-3யின் வெற்றி ஆகும். முதலில் நாங்கள் சந்திரயான்-1-ஐ செலுத்தும் போது, பிஎஸ்எல்வி (PSLV) மூலம் தான் செலுத்தினோம். குறிப்பாக அப்படி செலுத்துவது என்பது சென்னையில், இருந்து இமயத்திற்கு சைக்கிளில் செல்வது போல் இருக்கும்.

அதனால், நாங்கள் சில்ங் சாட் முறை அதாவது கவின்கல் (perigee apogee method) முறையில் அனுப்பினோம். இந்த முறை தான் மிகவும் எளிதான முறை ஆகும். இந்த முறையில் நாம் வெளாசிட்டியை (velocity) ஒவ்வொரு முறையும் அதிகரிக்க முடியும். சந்திரயான்-1 வெற்றிக்கு பிறகு, நாங்கள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை சந்தித்தோம். அவர்தான் எங்களுக்கு யோசனையை வழங்கினார். நிலவில் இந்திய கொடியின் வடிவத்தை பதிய வேண்டும் என்பது அவருடைய யோசனையே. அந்த யோசனை தான், நாங்கள் சந்திரயான்- 3 மூலம் செய்து காட்டினோம்.

சந்திரயான்-1 தந்த தரவுகளை வைத்து, சந்திரயான்-3 நிலவில் பல கனிம வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். சந்திரயான்-1 மூலம் முதல் முறையாக நாங்கள் வெற்றிக் கண்டோம். மேலும், ஏவப்படும் ராக்கெட்டின் தொழில் நுட்பம் வளர வளர, சந்திரயான்-3 இல், பல கருவிகளை வைத்து, பூமியில் இருந்து நிலவிற்கு அனுப்பினோம். முதலில் கவின்கல் முறையில், பூமியின் சுற்றுவட்ட பாதையில், சுற்றிக் கொண்டு, நிலவையை அடையவேண்டும்.

ஜூலை மாதத்தில் அனுப்பிய சந்திரயான்-3 ஆகஸ்ட் மாதத்தில் தரையிறங்கியது. ஆகஸ்ட் மாதத்தில், நிலவு இங்கு தான் வரும் என்று துல்லியமாக கணக்கிடப்பட்டிருந்தது. இங்கிருந்த அனுபட்ட விக்ரம் லேண்டர், கணக்கிடப்பட்டிருந்தது போல், மெதுவாக தரையிறங்க வேண்டும். அதன் பிறகு, அதில் இருந்து ரோவர் வெளியில் வந்து, நிலவில் ஊர்ந்து செல்ல வேண்டும். அதன் பிறகு, ஆராய்ச்சியை தொடங்க வேண்டும் என்று பல கட்டங்கள் இருந்தன. இது அனைத்தும் வெற்றிகரமாக நிகழ்ந்தது.

மேலும், சந்திரயான்-2 பற்றியை நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தோம். ஏன் அது தோல்வி அடைந்தது என்று, மீண்டும் நாங்கள் அதற்காக உழைத்தோம். நாம் எங்கு தரையிறக்கி தோல்வி அடைந்தோமோ அங்கு மீண்டும் தரையிறக்கி சாதனை புரிந்தோம். மேலும், நாளை வருங்கால தலைமுறைகள் அங்கு சென்று இன்னும் பல ஆராய்சிகளை செய்யலாம், மனிதர்களை அனுப்பலாம். இந்த வெற்றியானது கூட்டு முயற்ச்சியிக்கு கிடைத்த வெற்றி ஆகும்" என்றுத் தெரிவித்தார். தொடர்ந்து சந்திரயான்-3 திட்டம் குறித்தும் அதன் விளக்கமுறைகளையும் மாணவர்கள் மத்தியில் விரிவாக விவரித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆகலாம்; ஆனால் ஒரு மாநிலத்திற்கு முதல்வராக முடியுமா? - சவால் விடுத்த சீமான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.