ETV Bharat / state

புதுவையில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

author img

By

Published : Jan 4, 2021, 1:05 PM IST

புதுச்சேரி: ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு
9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

இந்தியாவில் கரோனா தொற்று பரவியதன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

தற்போது தொற்று குறைந்ததையடுத்து படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமாக சூழலுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜன.04) 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் அரசு, தனியார் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்:

மேலும், 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் இயங்கும் எனத் தெர்விக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு இல்லை என்பதால் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்துள்ளது.

9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

அதுமட்டுமன்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய வேண்டும் - மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்எல்ஏ மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.