ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆய்வு

author img

By

Published : Apr 16, 2021, 12:12 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுவதாகப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

practical exam
செய்முறைத் தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்ரல் 16) தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் செய்முறைத் தேர்வினை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் அரசு வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது.

வேதியியல் மாணவர்களுக்கு வாய் வைத்துக் குழாயில் கெமிக்கல் ஊதும் முறை தவிர்க்கப்பட்டுள்ளது. இயற்பியல் மாணவர்கள் தொட்டு செய்ய வேண்டிய கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், தாவரவியல் உயிரியல் மாணவர்கள் நுண்ணோக்கி கொண்டு செய்முறைத் தேர்வினைச் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 7000 மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுகின்றனர். கரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்கள், வேறு தேதியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா 2 ஆவது அலை: தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.