ETV Bharat / state

6 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

author img

By

Published : Nov 28, 2022, 8:37 PM IST

தமிழ்நாட்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharatடிசம்பரில் அரையாண்டு தேர்வு - அட்டவணை வெளியிட்ட  பள்ளிக் கல்வித்துறை
Etv Bharatடிசம்பரில் அரையாண்டு தேர்வு - அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 6,8,10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் 7,9,11 வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கேள்வித்தாள்களை மண்டல அளவில் உள்ள பள்ளியில் இருந்து பெற்று செல்ல வேண்டும். அதற்காக பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து கேள்வித்தாள்கள் பெற்றுச் செல்ல வேண்டும்.

டிசம்பரில் அரையாண்டு தேர்வு - அட்டவணை வெளியிட்ட  பள்ளிக் கல்வித்துறை
டிசம்பரில் அரையாண்டு தேர்வு - அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை

காலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் காலை 7.30 மணிக்கும், மாலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் மதியம் 12:00 மணிக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்படும். தேர்வினை எந்தவித புகார் அளிக்கும் இடம் அளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விசேஷத்துக்கு லீவு கேட்டா அசிங்கமா பேசுறாங்க - டிராஃபிக் போலீஸின் குமுறல் ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.