ETV Bharat / state

கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!

author img

By

Published : Feb 28, 2020, 3:57 PM IST

சென்னை: கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்க 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Rupees 43 crore for veterinary medicals
Rupees 43 crore for veterinary medicals

சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு அவசியம் என்பதை கருதி, புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!
கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!

அதன்படி 102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கட்டுவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!
கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.