ETV Bharat / state

'மக்கள் எளிதில் சான்றிதழ்களைப் பெற அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்' - போக்குவரத்துத்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 20, 2021, 4:12 PM IST

பொதுமக்கள் எளிதில் சான்றிதழ் பெற, போக்குவரத்து அலுவலகங்களை நவீன மயமாக்கும் திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

rto office development  chennai news  chennai latest news  chennai rto office development plane  transport minister rajakannappan  tamilnadu transport minister  ஆர் டி ஓ அலுவலகம்  போக்குவரத்து அலுவலகங்கள் நவீன மயமாக்கும் செயல் திட்டம்  சென்னை செய்திகள்  போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன்  அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன்
'மக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற ஆர் டி ஓ அலுவலகம் நவீனமயமாக்கப்படும்'

சென்னை: பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெறுவதற்காக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் நவீன மயமாக்கும் செயல் திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'போக்குவரத்துத் துறையில் போக்குவரத்து ஆணையர் கட்டுப்பாட்டில் இணை, துணை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

கடந்த ஆட்சியில் பல்வேறு குளறுபடிகளால், பொது மக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள், உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைச்சல் மற்றும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்த நிர்வாகத்தைச் சீர்செய்யும் விதமாக, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேவைகளுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை எளிதில் பெறுவதற்காக, போக்குவரத்து அலுவலகங்களை நவீன மயமாக்கும் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளை களையப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி, பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு: பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.