ETV Bharat / state

'நீட் தேர்வு வேண்டாம் என்பதே மக்கள் கருத்து' - ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் விளக்கம்

author img

By

Published : Nov 11, 2022, 7:05 PM IST

மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை 6 மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநிலக் கொள்கை கல்விக் கொள்கை குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டிற்கான மாநில புதிய கல்வி கொள்கை 6 மாதங்களில் உருவாக்கப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெறும் பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுத்தால் போதும் என்கின்ற வகையில் புதிய கல்வி கொள்கை இருக்காது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொது தேர்வு நடத்த வேண்டாம் என்ற கருத்தை மாணவர்களிடம் அதிகளவில் பெறப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுத்தேர்வு ஆர்வலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள், மாணவர்கள் , ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் தமிழ்நாடு முழுவதும் கருத்து கேட்டு முடிவடைந்துள்ள நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், “தமிழ்நாட்டிற்கு தனியாக ஒரு வருடத்தில் மாநில புதிய கல்வி கொள்கை அமைக்க அரசு கூறி இருந்தனர். தற்போது கருத்து கேட்பு கூட்டங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் அடுத்த 6 மாதங்களில் புதிய மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 8 மண்டலங்களில் பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர் உள்ளிட்டவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. சுமார் ஆயிரத்து 500 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து உள்ளது. பள்ளிகள் அருகில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள்கள் வழங்குவதற்கு என குழுவாக செயல்படுகின்றனர் என மாணவர்களே கூறுகின்றனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒரு விஷயம், கிராமபுறங்களில் உள்ள நபர்களால் நீட் தேர்வுக்கு தயாராகி வெற்றிபெற வசதிகள் இல்லை என்ற கருத்தே உள்ளது. கிராமப்புறத்தில் ஒரே ஒரு மாணவி மட்டுமே நீட் தேர்வு வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அவரும் CBSE பள்ளியைச் சார்ந்த மாணவியாக உள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன்

நுழைவு தேர்வுகள் இருக்க கூடாது என்பதே பெருவாரியான மாணவர்கள் கருத்தாக உள்ளது. புதிய கல்வி கொள்கையில் வெறும் பாடத்தை மட்டும் மனப்பாடம் செய்து படிப்பதை கடந்து விளையாட்டு , ஒழுக்கம் போன்ற அனைத்தும் கலந்ததாக இருக்கும் வகையில் வடிவமைத்து தரப்படும். பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டிற்கு போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள் இல்லாமல் இருக்கிறது.

எனவே மாணவர்களுக்கு உடல் நலத்தினை உருவாக்கும் வகையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கல்வி திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் தகுதி பெறும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பணிக்கு வந்தப் பின்னரும் தங்களுடைய அறிவு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக எலிக்காய்ச்சலை கண்டறிய ஆய்வகம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.