ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளை திறக்க கோரிக்கை!

author img

By

Published : May 19, 2022, 10:36 PM IST

தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்யக்கூடாது எனவும், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை தவிர்க்கலாம் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜூன் 13 ந் தேதி முதல் அரசுப் பள்ளிகளை திறக்க கோரிக்கை-அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் ஜூன் 13 ந் தேதி முதல் அரசுப் பள்ளிகளை திறக்க கோரிக்கை-அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

சென்னை : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ’தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31 ஆம் தேதி தேர்வுகள் முடிந்தாலும், ஜூன் மாதம் 10 முதல் 12ஆம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் மாதம் 20 அல்லது 27ஆம் தேதி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் ஏற்கெனவே ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் உள்ளனர். தொடக்கநிலை ஆசிரியர்களும் 20ஆம் தேதி முதல் விடுப்பில் செல்ல இருக்கின்றனர். அரசு இதனை மனதில் வைத்து 1-9வகுப்புகளை ஜூன் 13ஆம் தேதி முதல் அதாவது ஜூன் மாதம் திறந்து மாணவர்களுக்கு எழுத்து அறிவிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

உயர் வகுப்புகளை அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 20 அல்லது 27ஆம் தேதி திறக்கலாம் எனவும், அரசு இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏற்கெனவே சனிக்கிழமைகளில் இந்த கல்வி ஆண்டு முழுவதும் வேலை செய்த மனநிலையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதை இந்த ஆண்டும் தொடர வேண்டாம்.

ஏற்கெனவே அறிவித்தபடி 1-9 வகுப்புகளை ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டால் கல்விப் பணியில் தொய்வு இல்லாமல் சிறப்பாக இருக்கும். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும், பின்தங்கிய வகுப்புகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டால் மாணவர்கள் எழுத்தறிவு பெறுவதில் காணப்படும் இடர்பாடுகளை தடுக்கலாம்’ என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் - அமைச்சரிடம் கோரிக்கை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.