ETV Bharat / state

5 மாநில தேர்தலில் பாஜக கவனம்.. திரைமறைவில் அதிமுக-பாஜக கூட்டணியா? - ரவீந்திரன் துரைசாமி கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:05 PM IST

Aiadmk bjp alliance: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு, மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் பாஜக தரப்பிலும் தற்போது வரை ஏதும் கூறப்படாத நிலையில் மறைமுகமான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (I.N.D.I.A. Alliance) எதிர்கொள்ள தங்களது கூட்டணியை பலபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA Alliance) இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் பத்திரகையாளர் சந்திப்புகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' என தொடர்ந்து கூறி வருகிறார். இனி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் அதிமுக தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிமுக தரப்பில் தெரிவித்ததற்கு பாஜக தேசிய தலைமையிலிருந்து எந்தவித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அந்த அழைப்புக்காக இருவரும் காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவருமே பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஏற்று கொள்கின்றனர் அதே போல தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவும் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளதாகவும் சொல்லபடுகிறது.

யார் யார் பாஜக கூட்டணியில்?: தமிழகத்தில் பாஜக தலைமையில் அவைய உள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் பாமகவும் இருக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது. பாமகவைப் பொருத்தவரை, பிரதமர் வேட்பாளராக மோடியை தான் ஏற்று கொண்டுள்ளனர்.அதே போல தற்போது வரை அதிமுகவிற்கு ஆதரவு என்றும் கூறவில்லை அதனால் பாமகவிற்கு அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் இந்த வரிசையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் அடுத்த நகர்வு என்ன? அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி சொல்வது என்ன?: இந்தியா கூட்டணியை பொருத்தவரை, அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026-ல் தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும்; அதே கூட்டணிதான் நீடிக்கும். மேலும், அவர்கள் மிக பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளதால் அதே நிலைபாடு தான் என்கிறார்.

ஆனால் பாஜகவை பொருத்தவரை, தற்போது அவர்களுக்கு முக்கியமான ஒன்று 5 மாநில தேர்தல். இதில் தான், அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அதேவேளையில், மறைமுகமாக ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடனும் பாஜக தரப்பில் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார். குறிப்பாக, 'பாமக மட்டும் மதில்மேல் பூனை' என்பதுபோல், பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஏனெனில், அதிமுகவிற்கும் பாமக தேவை; அதனால், எந்த கூட்டணியில் அதிகமான தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கபடுகிறதோ? அந்த கூட்டணியில் பாமக சேர்ந்து கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

ஒருவேளை பாஜகவுடன் கூட்டணியில் இணைவது பாமகவிற்கு பின்னடைவு என யோசித்தால், வேறு வழியே இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதை தவிர்த்து, பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இணையும் என்கிறார், ரவீந்திரன் துரைசாமி. இதில், 5 மாநில தேர்தலில் பாஜக கவனம் செலுத்தியிருந்தாலும் திரைமறைவில் தமிழகத்தில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார். அதோடு, ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பாஜக மட்டுமில்லாமல், தமிழக அரசியல் கட்சிகள் பலவும் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவதால் தான் லியோ படத்துக்கு நெருக்கடி..! சீமான் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.