ETV Bharat / state

குடியுரிமை மசோதா திரும்பப் பெறப்படும்வரை போராட்டங்கள் பற்றி எரியட்டும்; சென்னையில் சூளுரை!

author img

By

Published : Dec 16, 2019, 11:35 PM IST

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

protest-against-citizenship-amendment-bill-in-chennai
protest-against-citizenship-amendment-bill-in-chennai

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ முத்தரசன், சிபிஐ(எம்) பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், காதர்மொய்தீன், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியது;

பாலகிருஷ்ணன் சி.பி.எம்:

குடியுரிமையை வழங்க மதத்தை அளவுகோல் ஆக்கிவிட்டனர். அந்தளவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தைக் கெடுத்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கவில்லை என்று கேட்டால் பதில் இல்லை. இந்தியாவின் ராஜபக்சேவாக மோடி மாறியுள்ளார். மோடி ஆட்சிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நேரம் வந்துள்ளது என்றார்.

சிபிஎம் பாலகிருஷ்ணன்
கவி.பூங்குன்றன், திராவிடர் கழகம்: பல்வேறு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடக்கிறது. காஷ்மீர், குடியுரிமை என இந்துத்துவ தத்துவங்களை இந்தியாவில் பாஜகவினர் புகுத்துகின்றனர். பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். குடியுரிமை, பிரஜா உரிமை அற்றவர்களாக மக்களை ஆக்க வேண்டும் என்கிற கோல்வார்க்கரின் வழியை பின்பற்றுகிறது மத்திய அரசு எனக் குற்றம்சாட்டினார்.


இதையும் படிங்க: ' மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை ' - டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் அதிரடி

கோபண்ணா, காங்கிரஸ் கட்சி:

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்பதால் இஸ்லாமியர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை மக்கள் விரும்பவில்லை. மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச்சட்டம் மாணவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது எனப் பேசினார்.

ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்:

இச்சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போராட்டத்தை நடத்தினர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இஸ்லாமிய தொழிலாளி முஷ்ரப் அலி இறக்கும் தருவாயில், இந்து நண்பர் அகர்வால் தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதான் மதம் கடந்த மனிதாபிமானம். அப்படிப்பட்ட மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய பின் நிறைவு உரையின்போது பேசிய அம்பேத்கர், இந்த அரசு மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு என்றார். அதனை பாஜக சிதைத்துள்ளது எனப் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்


ஆர்.எஸ்.பாரதி, திமுக:

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் மெல்லமெல்ல வலுவானதாக மாறியிருக்கிறது. இச்சட்டம் மிகப்பெரிய ஆபத்து. இப்போராட்டம் இரண்டாம் சுதந்திர போராட்டம் என்பது போல் உருவாகவுள்ளது. உலகில் அதிக இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். அஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகியுள்ளது. அன்புமணி பதவி ஏற்றபின் இச்சட்டத்தை ஆதரிக்க மட்டுமே அவைக்கு வந்திருந்தார். அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இச்சட்டம் நிறைவேறி இருக்காது. அனைவரும் ஒன்றுபட்டு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.

ஊடகவியலாளர் ஜென்.ராம்:

அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை எதிர்பார்த்தவர் காந்தி. அவற்றையெல்லாம் பறிக்கும் விதமாக பல்வேறு சட்டங்களை பாஜக கொண்டுவந்திருக்கிறது. இவர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஒரு குறிப்பிட்ட மக்கள் பாதிப்புக்கிள்ளாகின்றனர் எனப் பேசினார்.

ப்ரண்ட் லைன் பத்திரிக்கை ஆசிரியர் விஜயசங்கர்:

இந்தியா இப்போது எழுந்து நிற்கிறது. கேரளாவில் எதிரெதிர் கட்சிகள் இணைந்து போராடுகின்றன. அஸாமில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் போராடுகிறார்கள். அடையாளங்களை வைத்து மக்களை பிரித்தாளும் போக்கை பாஜக கடைபிடிப்பது அபாயகரமானது என்றார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்:

இந்த நாடு சமய சார்பற்ற நாடு. கடந்த 72 ஆண்டுகளாக பின்பற்றி வந்த மாண்புகளை உடைத்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பிற்கு ஏற்று சட்டத்தில் மாறுதல் செய்யப்படாவிட்டால், நாடு முழுமையாக ஏற்பட உள்ள போராட்டங்களின் நெருப்பில் பாஜக அரசு எரிந்து விடும். இந்தப்போராட்டம் பரவும், வெடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களின் மனதை பிரிக்கும்படியான சட்டத்தை பாஜக கொண்டுவந்துள்ளது. இப்போராட்டம் இத்தோடு நின்றுவிடாமல், தெருத்தெருவாக நடக்க வேண்டும். இந்தப் போராட்டம் தொடர வேண்டும் என்றார்.


மூத்த வழக்கறிஞர் பிரசாத்:

கம்யூனிஸ்ட் கட்சி நேர்மையான கொள்கையுடன் மக்களுக்காக போராடுகிறது. உண்மையில் மக்களுக்காக தான் இச்சட்டம் என்றால் ஒருதரப்பினருக்கு மட்டும் மறுப்பது ஏன்? மக்கள் போராட்டம் வலுப்பெற்றால் தான் இச்சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெல்லும் என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு: கேரளாவில் கூட்டாகப் போராடும் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும்..!

சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்:

குடியரசுத் தலைவரிடம் ஏற்கனவே வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார்கள். ஜனநாயகத்தில் எள் முனையளவும் நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகார நம்பிக்கை கொண்ட பாசிஸ்ட் ஆட்சி இங்கு நடந்து வருகிறது. மோடி ஒரு ஹிட்லர், அமித் ஷா ஒரு கோயபல்ஸ். ஹிட்லர் தன் உடலின் சாம்பல் கூட கிடைக்கக் கூடாது என்றதை சரியாக செய்தவர் கோயபல்ஸ். அதேபோல் அமித் ஷா செய்வாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது.

சிபிஐ முத்தரசன்

60% மக்கள் பாஜகவிற்கு எதிராகத்தான் உள்ளார்கள். மோடியின் பினாமி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அமைச்சர் பதவி வாங்கிக்கொள்வார்கள். பலக்கட்சிகள் கைக்கூலிகளாக உள்ளனர். அஸாமில் மட்டுமல்ல திரிபுரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது. மாணவர்கள் பேருந்துகளை எரிக்கவில்லை. காவல்துறையினர் தான் எரித்திருக்கின்றனர். நாட்டை படிப்படியாக இராணுவ மயத்திற்கு பாஜக மாற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் குழந்தையாக உள்ள பாஜக, அதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவோம் என்றார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:

இச்சட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அனால் நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். கட்சியின் பேரில் அண்ணா படம் இருக்கிறது. அம்மா ஆட்சி என்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அனைவரும் முழங்கியும், அவர்களுக்கு துரோகம் இழைத்து முதுகில் குத்தியுள்ளனர். நாட்டின் பல பிரச்னைகளை மறைக்க இந்த சட்டத்தை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிமுகவையும், பாமகவையும் மறக்க முடியாது. வருகின்ற 18ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. கோல்வார்க்கர் சிந்தனைகளை பாஜக அமல்படுத்துகிறது. நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை பறித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ள பாஜக முயல்கிறது என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி:

கேரளாவில் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. நாம் சற்று மந்தமாக உள்ளோம். மோசமானவர்களிடம் இந்த நாடு சிக்கிக்கொண்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாஜக வெளிப்படையாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்குகிறது. இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் இல்லை என்ற அமித் ஷா, நடுவே ரோகிங்யா இஸ்லாமியர்கள் எக்காலத்திலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். மோகன் பகவத் இந்தியா ஒரு இந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கிறார். அரசியலைப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இந்து ராஷ்ட்ரம் உருவாக்க உள்ளனர். இந்துக்களின் தேசம் என அறிவிக்க வேண்டும் என்பதே அமித் ஷாவின் நோக்கம். இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிற அச்சத்தை அமித் ஷா வெளிப்படுத்தி, இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்த சட்டத்தின் மூலம் குடியிரிமை மறுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் பற்றி எந்த பேச்சும் இல்லை. இச்சட்டத்தின் டார்கெட் இஸ்லாமியர்கள் மட்டுமே என்பதால் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறோம். அவர்களுக்கு தேவையெல்லாம் சனாதன தர்மம் மட்டுமே. அதிகாரம் கையில் இருப்பதால் அகந்தையோடும், ஆணவத்தோடும் பாஜக செயல்படுகிறது. இந்தப் போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் அல்ல. தேசத்தைக் காப்பதற்கானப் போராட்டம் என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் திருமாவளவன்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இருப்பதா அல்லது இறப்பதா? வாழ்வதா அல்லது சாவதா? என கேட்கும் அளவில் இந்த நாடு பல துண்டுகளாகிவிடுமோ என்கிற நிலையில் தான் மக்களை ஒன்றுபடுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் தமிழ்நாட்டில் கிளர்ந்து எழுந்துள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் ஒரு கருப்பு நாளாகும், பேரழிவு தரும் சட்டம் இது. அதிமுக உள்ளிட்டோர் இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் நிறைவேற்றியிருக்க முடியாது. இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை கேரளாவிற்குள் நுழைய விட மாட்டோம் என கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இது ஆபத்தான ஒன்று என பாஜக புரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீர் அமைதியாக உள்ளது என நினைக்க வேண்டாம். கந்தகக் கிணறு போல் உள்ள அந்த மாநிலம் விரைவில் கொதித்தெழும். அந்த மாநில இளைஞர்கள் பொங்கி எழுவார்கள். இஸ்லாமியர்களுக்கு இங்கு குடியுரிமை இல்லை என சொல்ல பாஜக யார் ?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

குப்தர்கள், மவுரியர்கள், அசோகரின் காலத்தில் நாம் இல்லை. ஒற்றுமைக்கு நான் விரோதி அல்ல. இலங்கை தமிழர்களுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. டெல்லி பல்கலை மாணவர்கள் போர்க்களம் புகுந்து விட்டார்கள். இந்த சட்டம் வங்காள விரிகுடா கடலில் தூக்கி எரியப்பட வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் இளைஞர்கள் தீப்பந்தங்களை ஏந்தியபடி அதிமுக மற்றும் பாஜக அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: பேருந்தை கொளுத்த போலீஸ், மாணவர்களை அடிக்க அடியாட்கள்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.12.19

குடியுரிமையை மசோதா திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் பற்றி எறியட்டும்: அரசில் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் சூளுரை...

குடியுரிமையை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு குடியுரிமையை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான பதாகைகள் ஏந்தியபடி நின்றனர்..

ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன், வைகோ, காதர்மொய்தீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின் பேசியவர்கள்,

பாலகிருஷ்ணன் சி.பி.ஐ,

குடியுரிமையை வழங்க மதத்தை அளவுகோல் ஆக்கிவிட்டனர். அப்பேத்கார் இருந்து பார்த்திருந்தால் அ காரி உமிழ்ந்திப்பார். அந்தளவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை கெடுத்துள்ளார்.. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கவில்லை என்று கேட்டால் பதில் இல்லை. இந்தியாவின் ராஜபக்சேவாக மோடி மாறியுள்ளார். மோடி ஆட்சிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நேரம் வந்துள்ளது..

கவி.பூங்குன்றன், திராவிடர் கழகம்..

பல்வேறு மாநிலங்களில் இதைவிட கடுமையான போராட்டங்கள் நடக்கிறது. காஷ்மீர், குடியுரிமை என இந்துத்துவ தத்துவங்களை புகுத்துகின்றனர். பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். குடியுரிமை, பிரஜா உரிமை அற்றவர்களாக மக்களை ஆக்க வேண்டும் என்கிற கோல்வார்க்கரின் வழியை பின்பற்றுகிறது மத்திய அரசு. ராமதாஸ் கூட்டணி தர்மத்திற்காக இச்சட்டத்தை ஆதரிப்பதாக கூறுகிறது..

வழக்கறிஞர் வைகை..,

பாஜக எதிர்பாராத அளவில் மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால், மக்களின் ஒற்றுமையான கருத்து இதில் தெரிகிறது. வெளியில் இருந்து வரும் 6 மதத்தை சார்ந்தவர்களை வரவேற்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு அவ்வாறு இல்லை என்கிறது சட்டம். இதனால் தான் எதிர்ப்பு அதிகரிக்கிறது. அரசாங்கம் மதத்தை தினிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.. இச்சட்டத்தின் நோக்கம் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி அவர்களை நாட்டைவிட்டு துரத்த வேண்டும் என்பதே.. இச்சட்டத்தை கண்டித்து மாநில அளவிலான வேலைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்..

கோபண்ணா, காங்கிரஸ் கட்சி..,

பாபர் மசூதி வழக்கில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பதால் இஸ்லாமியர்கள் கூட அதனை எதிர்க்கவில்லை. ஆனால் குடியுரிமையை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துவதை மக்கள் விரும்பவில்லை.. மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களால் ஆபத்தில்லை.. இச்சட்டம் மாணவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது..

பேராசிரியர் மார்க்ஸ்..,

பாஜக என்பதை அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்னும் கொடூர அமைப்பு இருக்கிறது. இஸ்ரேல் உள்ள அலியார் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. மிகத் தீவிரமாக களமிறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா பற்றி எரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. 15 கோடிக்கு மேல் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்...

ஆர்.எஸ்.பாரதி, திமுக..,

குடியுரிமையை சட்டத்திற்கு எதிரான இந்தப்போராட்டம் மெல்ல மெல்ல வலுவானதாக ஆகியிருக்கிறது. இச்சட்டம் மிகப்பெரிய ஆபத்தானதாகும். இப்போராட்டம் இரண்டாம் சுதந்திர போராட்டம் என்பது போல் உருவாக உள்ளது. உலகில் அதிக இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாகியுள்ளது. அன்புமணி பதவி ஏற்றபின் இச்சட்டத்தை ஆதரிக்க மட்டுமே வந்திருந்தார். அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இச்சட்டம் நிறைவேறி இருக்காது.. அனைவரும் ஒன்று பட்டு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும்..

ஊடகவியலாளர் ஜென்.ராம்..,

அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை எதிர்பார்த்தவர் காந்தி, அவற்றையெல்லாம் பறிக்கும் விதமாக பல்வேறு சட்டங்களை பாஜக கொண்டுவந்திருக்கிறது.. இவர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஒரு குறிப்பிட்ட மக்கள் பாதிப்புக்கிள்ளாகின்றனர்...

ப்ரண்ட் லைன் பத்திரிக்கை ஆசிரியர் விஜயசங்கர்..,

இந்தியா இப்போது எழுந்து நிற்கிறது. அப்படியான எழுச்சியை இச்சட்டத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்துள்ளது. கேரளாவில் எதிரெதிர் கட்சிகள் இணைந்து போராடுகின்றது. அஸ்சாமில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் போராடுகிறார்கள். அடையாளங்களை வைத்து மக்களை பிரித்தாளும் போக்கை பாஜக கடைபிடிப்பது அபாயகரமானது.. அனைத்து மக்களுக்கும் நல்லதை செய்வதே புண்ணிய பூமியாகும்..

அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்..,

இந்த நாடு சமய சார்பற்ற நாடு என அறிஞர்கள் சொல்லியுள்ளனர். கடந்த 72 ஆண்டுகளாக பின்பற்றி வந்த மான்புகளை உடைத்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பிற்கு மாற்று ஏற்பட்டு செய்து சட்டத்தில் மாறுதல் செய்யப்படாவிட்டால், நாடு முழுமையாக ஏற்பட உள்ள போரட்டங்களின் நெருப்பில் பாஜக அரசு எரிந்து விடும். இந்தப்போராட்டம் பரவும், வெடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. மக்களின் மனதை பிரிக்கும் படியான கேவலமான சட்டத்தை பாஜக கொண்டுவந்துள்ளது. இப்போராட்டம் இத்தோடு நின்றுவிடாமல், தெருத்தெருவாக நடக்க வேண்டும்.. 20 கோடி முஸ்லிம்களை வெளியேற்றிவிட்டு இங்கு ஆட்சி செய்யும் தைரியம் யாருக்கு இருக்கிறது... இப்போராட்டம் தொடர வேண்டும்..

மூத்த வழக்கறிஞர் பிரசாத்..,

கம்யூனிஸ்ட் கட்சி நேர்னையான கொள்கையுடன் ம்க்களுக்காக போராடுகிறது.. உண்மையில் மக்களுக்காக தான் இச்சட்டம் என்றால் ஒருதரப்பினருக்கு மறுப்பது ஏன்.. மக்கள் போராட்டம் வழுப்பெற்றால் தான் இச்சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வெல்லும்...

கல்வியாளர் தாவூத்..,

இந்தியாவின் அரசியல் சாசனம் உலக அளவில் மிகச்சிறந்த சட்டமாகும்.. இதன் அடிப்படையை தகர்க்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது.. இந்த நாட்டிலே பாஜகவினருக்கு வெறும் 10% தான் ஆதரவு உள்ளது அப்படியிருக்கையில் நாட்டின் அடிப்படை சட்டத்தை மாற்ற என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு.. இந்த நாட்டின் இஸ்லாமியர்கள் கொதிதெழுந்து அவர்கள் போராட தூண்டினால் அது புத்தி சுவாதீனமில்லாவர்களால் மட்டுமே என்றார் அம்பேத்கர்.. உலக அளவில் எந்த பாசிச இயக்கமும் நிரந்தரமாக இருந்ததில்லை.. முசோலினிக்கு ஏற்பட்ட நிலமை இங்கே யாருக்கும் வர வேண்டாம் என நான் நினைக்கிறேன்..


சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்..,

குடியரசு தலைவரிடம் ஏற்கனவே வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார்கள். ஜனநாயகத்தில் எள் முனையளவும் நம்பிக்கை இல்லாமல், சர்வாதிகார நம்பிக்க கொண்ட பாசிஸ்ட் ஆட்சி இங்கு நடந்து வருகிறது. மோடி ஒரு ஹிட்லர் அமித்சா ஒரு கோயபல்ஸ்.. ஹிட்லர் தன் உடலின் சாம்பல் கூட கிடைக்கக் கூடாது என்பதை சரியாகச் செய்தவர் கோயபல்ஸ்... அதேபோல் அமித்சா செய்வாரா என்பது எனக்குத் தெரியாது.. ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. 60% மக்கள் பாஜகவிற்கு எதிராகத்தான் உள்ளது. மோடியின் பினாமிகட்சிகள் உள்ளிட்ட கட்சியினர் இந்த சட்டத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளனர். பின்னர் அமைச்சர் பதவி வாங்கிக்கொள்வார்கள்.. கைக்கூலிகளாக உள்ளனர் பல கட்சியினர்.. அஸ்சாமில் மட்டுமல்ல திரிபுரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது.. மாணவர்கள் பேருந்துகளை எரிக்கவில்லை.. காவல்துறையினர் தான் எரித்திருக்கின்றனர்.. நாட்டை படிப்படியாக இராணுவ மயத்திற்கு மாற்றி வருகின்றனர்.. ஆர்.எஸ்.எஸ் சின் குழந்தையாக உள்ள பாஜக அதற்கு துணை போகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவோம்..

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா..,

இச்சட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.. அனால் நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும்.. கட்சியின் பேரில் அண்ணா படம் இருக்கிறது. அம்மா ஆட்சி என்கிறார்கள்.. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அனைவரும் முழங்கியும், அவர்களுக்கு துரோகம் இழைத்து முதுகில் குத்தியுள்ளனர் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள்.. நாட்டின் பல பிரச்சினைகளை மறைக்க இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது பாஜக அரசு.. இருப்பினும் அதிமுகவையும், பாமகவையும் மறக்க முடியாது. வருகின்ற 18 ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.. கோல்வார்க்கர் சிந்தனைகளை அமல்படுத்துகிறது பாஜக.. நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை பரித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ள பாஜக முயல்கிறது..

திருமாவளவன் எம்.பி..,

கேரளாவில் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. நாம் சற்று மந்தமாக உள்ளோம். அவ்வளவு மோசமானவர்களிடம் இந்த நாடு சிக்கிக்கொண்டுள்ளது. இச்சட்டம் வெளிப்படையாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்குகிறது பாஜக. இஸ்லாமிய மக்களை எச்சரிக்கை செய்கிறது இந்த அரசு.. அறிமுகப்படுத்தப்பட்ட போது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் இல்லை என்ற அமித்சா நடுவே ரோகிங்ஜா இஸ்லாமியர்கள் எக்காலத்திலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.. மோகன் பகவத் இந்தியா ஒரு இந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கிறார். அரசியலைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டு இந்து ராஸ்ட்ரம் உருவாக்க உள்ளனர். இந்துக்களின் தேசம் என அறிவிக்க வேண்டும் என்பதே அமித்சாவின் நோக்கம்.., இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிற அச்சத்தை அமித்சா வெளிப்படுத்தி, இஸ்லாமியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது.. ஈழத்தமிழர்கள் பற்றி எந்த பேச்சும் பேச்சும் இல்லை.. இச்சட்டத்தின் டார்கெட் முஸ்லிம்கள் மட்டுமே என்பதால் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறோம்.. அவர்களுக்கு தேவையெல்லாம் சனாதன தர்மம் மட்டுமே.. அம்பேத்கர் சாதிகள் ஒழிய வேண்டும் என்று நினைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காட்டியவர் அம்பேத்கர் அவர் சாதீய சிந்தனையாளர் அல்ல.. அதிகாரம் கையில் இருப்பதால் அகந்தையோடும், ஆணவத்தினை வெளிப்படுத்துகின்றன பாஜக..
மாதமாற்றமும் இந்துக்கள் பெரும்பான்மை குறைய காரணம். ஏன் மதம் மாறுகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டாமா.. ஒரே நாளில் 10 லட்சம் பேரை புத்த மதத்திற்கு மாற்றியவர் அம்பேத்கர்.. இந்தப் போராட்டம் முஸ்லிகளுக்கான போராட்டம் அல்ல... தேசத்தை காப்பதற்காக போராட்டம்...

ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்..,

இச்சட்டத்திற்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.. கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போராட்டத்தை இச்சட்டத்திற்கு எதிராக நடத்தினர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஏற்பட்ட விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அப்போது இஸ்லாமிய தொழிலாளி முஷ்ரப் அலி அவரது இறக்கும் தருவாயில் இந்து நண்பர் அகர்வால் தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதான் மதம் கடந்த மனிதாபிமானம்.. அப்படிப்பட்ட மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது.. சட்டத்தை இயற்றிய பின் நிறைவு உரையின் போது பேசிய அம்பேத்கர், இந்த அரசு மக்களுக்கு, மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு என்றார்.. அதனை சிதைக்கிறது பாஜக..


மதிமுக பொதுச்செயலாளர், வைகோ..,

இருப்பதா அல்லது இறப்பதா.. வாழ்வதா அல்லது சாவதா என கேட்கும் அளவில் இந்த நாடு பல துண்டுகளாகிவிடுமோ என்கிற நிலையில் மக்கள் ஒன்றுபடுத்தி போராட்டம் நடைபெறுகிறது.. இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் தமிழகத்தில் கிளந்து எழுந்துள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் ஒரு கருப்பு நாளாகும், பேரழிவு தரும் சட்டம் இது.. அதிமுக உள்ளிட்டோர் இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் நிறைவேற்றியிருக்க முடியாது.. இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட அச்சட்டத்தை கேரளாவிற்குள் நுழைய விட மாட்டோம் என பினராயி விஜயன் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் பிரகடனப்படுத்தி உள்ளது. இது ஆபத்தான ஒன்று என பாஜக புரிந்துகொள்ள வேண்டும்.. காஷ்மீர் அமைதியாக உள்ளது என நினைக்க வேண்டாம்.. கந்தகக் கிணறு போல் உள்ள அந்த மாநிலம் விரைவில் கொதித்தெழும்.. அந்த மாநில இளைஞர்கள் பொங்கி எழுவார்கள். இஸ்லாமியர்களுக்கு இங்கு குடியுரிமை இல்லை என செல்ல பாஜக யார்..! குப்தர்கள், மவுரியர்கள், அசோகரின் காலத்தில் நாங்கள் இல்லை.. ஒற்றுமைக்கு நான் விரோதி அல்ல.. இலங்கை தமிழர்களுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. டெல்லி பல்கலை மாணவர்கள் போர்க்களம் புகுந்து விட்டார்கள்.. எங்கள் மக்களுக்கு குடியுரிமை கொடுக்கவில்லை ... இந்த சட்டம் வங்காள விரிகுடா கடலில் தூக்கி எரியப்பட வேண்டும் என நான் சொன்னேன் என்றார்..

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் இளைஞர்கள் தீ பந்தங்களை ஏந்தியபடி அதிமுக மற்றும் பாஜக அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்..

tn_che_protest_against_citizenship_amendment_bill_script_7204894







Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.