ETV Bharat / state

Aarudhra Scam: ட்விட்டர் பதிவால் மாட்டிக்கொண்ட ஆர்.கே சுரேஷ்!

author img

By

Published : Jul 15, 2023, 4:27 PM IST

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடியில் தொடர்புடைய பாஜக நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ், துபாயில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அண்மையில் பதிவிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே சுரேஷ்
ஆர்.கே சுரேஷ்

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மோசடி விவகாரத்தில் தொடர்புடைய பாஜக நிர்வாகியும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ், 15 கோடி ரூபாய் அளவில் பணம் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி இவ்வழக்கின் முக்கிய தரகரான ரூசோ என்பவரிடமிருந்து பணத்தை பெற்றதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி தொடர்பான குற்றப்பத்திரிக்கையில், ஆர்.கே சுரேஷ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் நிதி நிறுவன மோசடியிலும் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ்க்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்காக லுக் அவுட் (look out) நோட்டீஸ் ஒன்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் எல்பின் நிதி நிறுவன மோசடியில் தொடர்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியானதை அடுத்து. இன்று தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Neomax: ராமநாதபுரத்தில் 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி: இருவரை கைது செய்த போலீசார்!

கடந்த ஆறு மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் நாகப்பாம்பு படத்தை வெளியிட்டு இருந்தார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அழித்தும் உள்ளார்.

துபாயில் ஆர்.கே சுரேஷ் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தை, எந்த இடத்தில் இருந்து இயக்குகிறார் என்பது குறித்து விசாரணையை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த ட்விட்டர் பதிவை எந்த செல்போன் அல்லது எந்த கணினியை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். கணினியின் ஐபி முகவரி (IP address) அல்லது செல்போனின் சிக்னல் ஆகியவை எங்கு உள்ளது. என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே சுரேஷ்யை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீசார் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு கெத்தாக போஸ் கொடுத்த திருடர்கள்; பழனியில் அதிர்ச்சி!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.