ETV Bharat / state

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கும் தனியார் நிறுவனம்!

author img

By

Published : Jul 28, 2020, 12:55 AM IST

சென்னை: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் தனியார் கேஸ் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் வழங்கிவருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

கரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் குறைவு காரணமாக பல இன்னல்கள் ஏற்படுகின்றன. அதனைப் போக்கும் வண்ணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் அவர்களது வீட்டிலேயே சென்று வழங்கிவருகிறது ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் தனியார் கேஸ் நிறுவனம்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் முரளி கூறுகையில், ”இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளோம். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் குறைந்த கட்டணத்தில் சிலிண்டர்களைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். தேவைக்கேற்ப எங்களால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்ய முடியும்” என்றார்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகிய இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக அவர்களுக்குத் தேவையான உடைகள், மருத்துவ வசதிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக்க் கொடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் கருவிகள் வழங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.