ETV Bharat / state

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் தொடங்கும் - முதலமைச்சர்

author img

By

Published : Sep 9, 2021, 12:15 PM IST

Updated : Sep 9, 2021, 6:35 PM IST

சென்னை: இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin
Stalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனையடுத்து பேசிய அவர், “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தமிழினத்தின் பெருமையைப் பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளைத் தீட்டியது, பூம்புகார் கோட்டம் அமைத்தது. தமிழை கணினி மொழி ஆக்கியது, தமிழாசிரியர்களை தலைமை ஆசிரியராக்கியது திமுக ஆட்சியில்தான்.

பொருநை நாகரிகம்
பொருநை நாகரிகம்

பண்டைய நாகரிகத்தினர் தமிழன்தான்

பண்டைய நாகரிகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ மறுக்கவோ முடியாது. சிவகங்கை கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

வியக்க வைக்கும் செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட காளைகள், கறுப்பு சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் ஆய்வு

பொருநை அருங்காட்சியகம்

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் ஆய்வு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களீல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

கார்பன் ஆய்வின் முடிவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற இனமாக தமிழினம் விளங்கியுள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

கீழடி நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஆதிச்சநல்லூருக்கு அருகில் கண்டறியப்பட்ட நெல்மணிகள் அமெரிக்காவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் நெல் மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருநை அருங்காட்சியகம்

ஐந்து கோடி ரூபாய் அகழ்வாய்வுப் பணிக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் நவீன பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

முதல்கட்டமாக முசிறி, கேரள மாநிலத்தில் பட்டணம் என அழைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழரின் பண்பாட்டைத் தேடி ஆய்வுகள் செய்யப்படும்” என்றார்.

Last Updated : Sep 9, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.