ETV Bharat / state

காவலர் வீரவணக்க நாள்: நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!

author img

By

Published : Oct 20, 2020, 6:31 PM IST

Updated : Oct 20, 2020, 6:57 PM IST

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, காவல்துறை தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள வீரக்காவலர்கள் நினைவுருவக் கற்சிலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

காவலர் வீரவணக்க நாள்: நினைவுறுவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்
காவலர் வீரவணக்க நாள்: நினைவுறுவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்

காவலர் வீரவணக்க நாளையொட்டி, சென்னை காவல்துறை டிஜிபி அலுவலக வளாகத்தில் வீர காவலர்கள் நினைவுருக் கற்சிலைகளை திறந்துவைத்த பின், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து மரக்கன்றை நட்டு வைத்தனர்.

எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் பணியின்போது 292 காவலர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கலந்துகொண்டு வீர காவலர் நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், அன்பழகன், வேலுமணி, தங்கமணி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Last Updated : Oct 20, 2020, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.