ETV Bharat / state

தாய்ப்பாலுக்குக்கூட பிரதமர் மோடி வரி போடுவார்! - கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Aug 5, 2022, 4:54 PM IST

அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி
தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி

சென்னை: அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்வு; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், 'அக்னிபத்' திட்டம் ஆகியவற்றைக்கண்டித்து சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை ராஜிவ்காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி
தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி

தாய்ப்பாலுக்கும் வரி போடுவார்..!: ஆர்பாட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்ககோவன் பேசியதாவது, “நாட்டின் சுதந்திரத்தை அழிக்க நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஜி.எஸ்.டி வரியை அரிசி, பால், தயிர் போன்ற பொருட்களுக்குப்போட்டு உள்ளனர். கழுதைப்பாலுக்கும் வரி போடுவார்கள். அதைவிட கொஞ்சம் ஏமாந்தால் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி போடுவார்கள்.

தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி
தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி

5 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிபோட்டு அதானி, அம்பானிக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிறார். சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும், மோடி, அமிஷ் தாவை வீட்டுக்கு அனுப்பும்வரை நாம் ஓயக்கூடாது“எனப் பேசினார்.

ராகுல் காந்தி ஆட்சி வரவேண்டும்..!: தங்கபாலு மேடையில் பேசுகையில், “நாடு முழுவதும், ஏழை மக்களுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பன்முக வரி போட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து விலக்கு பெற்றனர்.

தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி
தாய்ப்பாலுக்கு கூட பிரதமர் மோடி வரி போடுவார்..! - கே.எஸ்.அழகிரி

பாஜக ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். நல்லாட்சி அமைக்க, 2024இல் ராகுல் காந்தி ஆட்சிவர வேண்டும். ஒவ்வொருவரும் ராகுல் காந்தியாக மாற வேண்டும்” எனப்பேசினார்.

முகவரி தெரியாமல் போவார் மோடி..!: காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கினால் பிரதமர் மோடி முகவரி தெரியாமல் போய்விடுவார். 5 ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதியே வழங்கவில்லையே.

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் அனுபவம் இல்லாத அதானி பங்கேற்றுள்ளார். தவறு நடக்கவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் நீங்கள் நிர்ணயம் செய்தத்தொகையை விட குறைவாக வந்துள்ளது. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

பாஜகவைத் தகர்க்க வலிமையான பரப்புரை வேண்டும். பெண்களை ஒன்றுதிரட்டவேண்டும். பெண்கள் தான் நாட்டின் வலிமையான சக்தி. சோனியா, ராகுல் மீதான தாக்குதல் ஜனநாயகம் மீதான தாக்குதல். அதனால் தான் நாங்கள் எதிர்க்கிறோம். புதிய கல்விக்கொள்கையால் அடித்தட்டு மக்கள் மீண்டும் அவர்கள் குலத்தொழிலை செய்ய நேரிடும்.

இந்து மதம் எங்களுக்குச்சொந்தம்..!: மதத்தில் சீர்திருத்தம் வேண்டும், இந்து மதம் எங்களுக்குச்சொந்தமானது, நீங்கள் அதில் புகுந்தவர்கள். நீங்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். ’ஆர்எஸ்எஸ்’-யே வைத்திருந்தால் இன்று இந்து என்ற மதம் இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச்சந்தித்த கே.எஸ். அழகிரி, ”மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போடும் மத்திய அரசு, தாய்ப்பாலுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 5ஜி விவகாரத்தில் அதிக லாபம் கிடைத்துள்ளது என அண்ணாமலை கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மத்திய அரசுதான் இவ்வளவு ரூபாய்க்கு இலக்கு வைத்தோம்; அதைவிட குறைவான பணம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். எனவே ஊழல் நடந்திருக்கிறது என்று ஆ.ராசா கூறுவதில் தவறில்லை. அதிக லாபம் கிடைக்கவில்லை என்றால் இந்த ஏலத்தை ரத்து செய்வது தானே சிறந்ததாக இருக்கும்” எனப்பேசினார்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸார் பேரணியாக செல்ல முயன்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸாரைக் காவல்துறையினர் கைதுசெய்து பேருந்தில் ஏற்றிச்சென்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது - கே.பாலகிருஷ்ணன்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.