ETV Bharat / state

16 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள்

author img

By

Published : Aug 26, 2022, 12:08 PM IST

நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 14 தங்கம், இரண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் 16 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னை: நேபாள நாட்டில் ஆறாவது இன்டர்நேஷனல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கோகோ, கராத்தே, சிலம்பம் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் இருந்து கலந்து கொண்ட தனியார் பெடரேஷனை சேர்ந்த 17 பெண்கள் 14 தங்கப்பதக்கமும் 2 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

சென்னை திரும்பிய வீராங்கனைகளுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனைகள் கூறுகையில், இந்தியா மற்றும் போட்டிகள் அனைத்து மிகவும் கடினமாக இருந்தன. இதில் 14 தங்கப்பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மத்திய,மாநில அரசுகள் உதவியும் ஊக்கமும் அளித்தால் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் சர்வதேச அளவில் பதக்கங்களை தொடர்ந்து வெல்ல வேண்டும் என்பது எங்களது லட்சியம் என கூறினர்.

இதையும் படிங்க: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.