ETV Bharat / state

சென்னையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லையா? பயணிகள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 5:13 PM IST

தொடர்வ விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிருந்த பயணிகள் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் குடும்பத்தோடு பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

விடுமுறைக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை: பயணிகள் குற்றச்சாட்டு!
விடுமுறைக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை: பயணிகள் குற்றச்சாட்டு!

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து, தமிழகம் மற்றும் திருவனந்தபுரம், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

ஆனால், கும்பகோனம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் விடுமுறையோ அல்லது விழாக்காலமோ எதுவாக இருந்தாலும் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இதனால் விடுமுறை, மற்றும் விழாக் காலங்களில் சென்னையின் முக்கிய போக்குவரத்து தளங்களான சென்னை கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் நேற்று(செப். 17) அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன. கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இன்று (செப். 18) முதல் இயக்கப்பட உள்ளன.

அதன்படி மொத்தம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சொந்த ஊர் செல்லும் மக்கள் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் விநாயகர் சதுர்த்தி தமிழகத்தை விட வட இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாப்படும்.

இதனால் சென்னையில் இருக்கும் வடமாநிலத்தினர் சனிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் குவிந்ததால் தாம்பரம் ரயில் நிலையம் பயணிகள் கூட்டம் நிறைந்து காணபட்டது. சென்னையில் இருந்து இன்று 650 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபட்டு இருந்தது.

ஆனால், சனிக்கிழை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கும்பகோனம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி, நாகர்கோவில், தூத்துகுடி, கோவை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், மேலும் சென்னை போக்குவரத்து கழத்த்தின் மாநகரப் பேருந்துகள் விழுப்புரத்துக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது" - மு.க.ஸ்டாலின் சூசகம்!

இதேபோல் நேற்று முன்தினம் (செப். 16) இரவும் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தைவிட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு இல்லாமல் வந்த பயணிகள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பயணிகளிடம் கேட்டப்போது, "விநாயகர் சதுர்த்தி, மற்றும் தொடர் விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து இருக்கும் என்று நாங்கள் சனிக்கிழமை இரவு ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தோம். ஆனால், பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதே உண்மை.

சனிக்கிழமை முழுவதும் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர், கும்பகோனம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.

இரவு 8 மணி வரை நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம். காலை 3 மணி வரை திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் போதுமான அளவு பேருந்துகள் இயக்கபட்டன. போதுமான பேருந்துகள் இல்லை. மேலும் மழை பெய்ததால் பேருந்து மாறி மாறி செல்லபார்த்தால், மாநகரப்பேருந்தை விழுப்புரம் வரை இயக்குகின்றனர். குறிப்பிட்ட வழித்தடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை" என்று கூறினார்.

கும்பகோனம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வழித்தடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணி வரை பேருந்துகள் வரவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்ததாகவும், போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் பலர் தங்களது உடைமைகளுடன் இரவு முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாகவும், இதைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து, கோவைக்கு ரூ 2,500 வரை கட்டணம் வசூலிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கூறப்படும் நிலையில் போதுமான ஏ.டி.ம் இல்லததால், இருக்கும் ஏ.டி.எம். மையங்களின் வாசல்களி; நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்லும் அவலத்திற்கு மக்கள் ஆளாகினர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. ஸ்தம்பித்து போன சென்னை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.