ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்குத் தடை: அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு

author img

By

Published : Nov 23, 2020, 10:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்குத் தடைவிதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

tn govt
tn govt

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து, கடனைத் திருப்பித் தர முடியாமல் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவந்தது. இதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யக் கோரி எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

அதில், இந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. தடையை மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன், அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல்செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அவசரச் சட்டம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வறுமையால் வாய்ப்பிழந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.