ETV Bharat / state

தீபாவளி 2023; சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தில் ஊருக்குச் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 12:38 PM IST

Omni bus: ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார் தெரிவிக்க புதிதாக தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என ஆம்னி பேருந்து சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.

Omni bus
ஆம்னி பேருந்து

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும். நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

எனவே, பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம்போல் இயக்கப்படும்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா; அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.