ETV Bharat / state

கையும் களவுமாக பிடிப்பட்ட அலுவலர்!

author img

By

Published : Nov 9, 2020, 11:36 PM IST

சென்னை: தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அலுவலரை, லஞ்சம் ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

கையும் களவுமாக பிடிப்பட்ட அலுவலர்!
கையும் களவுமாக பிடிப்பட்ட அலுவலர்!

சென்னை, வியாசர்பாடியில் வசிக்கும் புஷ்பா என்பவரின் கணவர் ஏழுமலை கடந்த 2015ஆம் ஆண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மழை வெள்ளத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது வாகனம் மோதியல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கு இழப்பீடாக, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்குவதற்கான ஆணை வந்தது. இந்நிலையில் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இழப்பீடு காசோலையை கொடுப்பதற்காக புஷ்பா, அவரது மகன் ஆகியோரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

லஞ்சம் தராததால் காசோலையை வழங்காமல் அலுவலர்கள் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துவந்தனர். இதனையடுத்து, சரவணன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ரசாயனம் தடவிய பணத்தை சரவணனிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதனை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முருகனிடம் கொடுக்க கூறியுள்ளனர்.

அதே போன்று சரவணன், அலுவலர் முருகனிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை முருகனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவை அலுவலகத்தில் உள்ள அனைவரையும் நான்குமணி நேரமாக பரிசோதனை செய்தனர். தற்செயலாக அலுவலகத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை போடுவதைக் கண்டு வெளியில் இருந்தபடியே அவசர அவசரமாக கிளம்பி சென்றுவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.