ETV Bharat / state

இன்றைய ராசிபலன்

author img

By

Published : Oct 17, 2020, 10:34 AM IST

நேயர்களே இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

horoscope today
horoscope today

மேஷம்

இன்று, சூரியன் துலா ராசிக்கு இடம்பெயர்கிறது. பணம், பொருளாதார விஷயங்களில் இந்த வாரம் சராசரியாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் பயணம் செய்ய நேரிடலாம்.

பரிகாரம் - அதிகாலையில் எழுந்து சூரிய பகவானை தரிசித்து சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

ரிஷபம்

சூரியனின் இடப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமாக இருக்கும். வீட்டிலும் பணி இடத்திலும் உங்கள் புகழும் மதிப்பும் அதிகரிக்கும்.

பரிகாரம் - ஏழை எளியவர்களுக்கு கோதுமையை தானமாக கொடுங்கள்.

மிதுனம்

சூரியன் மாறுவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் முடிக்காமல் விட்ட வேலைகளை நிறைவு செய்வீர்கள். வீடு வாகனம் வாங்குவதற்கு இது நல்ல நேரம் ஆகும். உங்கள் உடல்நலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம் - சூரிய பகவானுக்கு குங்கும அபிஷேகம் செய்யுங்கள்.

கடகம்

சூரியன் துலா ராசிக்கு இடம் பெயரும்போது கடக ராசிக்காரர்களுக்கு சிறிது பதட்டமாக இருக்கும். இந்த மாதம் வேலையில் இடமாற்றம் வேண்டுபவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பரிகாரம் - உங்கள் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசிகளைப் பெற்று தினமும் உங்கள் நாளை தொடங்குங்கள்

சிம்மம்

துலா ராசிக்கு சூரியனின் வருகை சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார லாபங்களை தரும். இந்த மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் உற்றார் உறவினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம் - சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்து அவருடைய மந்திரங்களை ஜபிக்கவும்.

கன்னி

சூரிய பகவான் துலா ராசிக்கு இடம் மாறுவது கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும்கூடும். உங்கள் பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களை சந்திப்பீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.

பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். (ஒரு முழு ஜபமாலை)

துலாம்

இன்று முதல் சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த மாதம் முழுவதும் உங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் பழக வேண்டும். நீங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் கோபப்படும் வாய்ப்புகள் உண்டு. இருந்தாலும் உங்கள் பகைவர்களால் உங்கள் நற்பெயரை கெடுக்க முடியாது. இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம். - சிவலிங்கத்திற்கு ஜல அபிஷேகம் செய்யுங்கள்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இடமாற்றம் சிறப்பாகவே இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு செலவுகள் ஏற்படலாம். உங்கள் போட்டியாளர்களை வெற்றி பெறுவீர்கள். இருந்தாலும் எந்த சட்ட சிக்கல்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம் - இந்த காலகட்டத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.

தனுசு

துலா ராசிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சி இந்த கட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பண்டிகைக்கால பரபரப்பில் அல்லது பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருப்பீர்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சராசரியாக இருக்கும்.

பரிகாரம் - தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

மகரம்

துலா ராசிக்கு இடம்பெயரும் சூரியன் மகர ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை தருவார். வேலையில் அல்லது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக லாபம் வேண்டும் என்று பேராசைப்பட்டால் நஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

பரிகாரம் - சூரிய அஷ்டகம் படியுங்கள்.

கும்பம்

சூரியன் மாறிய பிறகு கும்ப ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் திசை அற்புதமாக இருக்கிறது. சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம் - காயத்ரி சாலிசா படியுங்கள்.

மீனம்

சூரியன் துலா ராசிக்கு இடம் மாறுவது மீன ராசிக்காரர்களுக்கு சற்று கடினமான காலகட்டமாக இருக்கும். வீண் வம்புகளிலிருந்து விலகி இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது. அதேசமயம் உங்களுக்கு சில பண ஆதாயங்களும் கிடைக்கும். பரிகாரம் - ஏழைகளுக்கு கோதுமையும் வெல்லமும் தானமாக கொடுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.