ETV Bharat / state

ஜெயலலிதா நினைவு நாளில் ஒன்றிணையும் ஓபிஎஸ்-சசிகலா?

author img

By

Published : Nov 26, 2022, 6:19 PM IST

ஜெயலலிதா நினைவு நாளில் ஓபிஎஸ்-சசிகலா ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா நினைவு நாளில் ஒன்றிணையும் ஓபிஎஸ்-சசிகலா
ஜெயலலிதா நினைவு நாளில் ஒன்றிணையும் ஓபிஎஸ்-சசிகலா

சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான வேலைகளை, பாஜகவில் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் சந்திப்பில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ் உடனான இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆழமாக சிந்தித்து முடிவு எடுங்கள் என ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவை ஒன்றிணைக்க ஒருவேளை இபிஎஸ் சம்மதம் தெரிவித்தால், வரும் ஜனவரி 17-ம் தேதி இணைப்பிற்கான நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது ஒருபுறம் இருக்க, இபிஎஸ் உடனான பதவி மோதல் காரணமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பக்கம் ஓபிஎஸ் திரும்பினார். பலமுறை "நேரம் வரும் போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நேரடியாக சந்திப்பேன்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். பல மாதங்களாக இந்த சந்திப்பு தாமதமான நிலையில், அது தற்போது சாத்தியமாக கூடிய சூழல் வந்துள்ளதாக கருதப்படுகிறது.

நேற்று(நவ.25) சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டார். ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலாவிடம் சில நிர்வாகிகள், "ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் மெரினாவில் நடைபெறும் அமைதி பேரணியில் ஓபிஎஸையும் சந்திக்கலாம்.

ஓபிஎஸ் உடனான சந்திப்பு தாமதமாகி கொண்டே செல்கிறது. அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஜெயலலிதா நினைவு நாளில் அரங்கேற்றிக் கொள்ளலாம்" என கூறியுள்ளனர். இதற்கு சசிகலா, "ஓபிஎஸ் மட்டும் அல்ல, டிடிவி தினகரனையும் அழைத்து ஒரு மிகப்பெரிய பேரணியாக செல்ல வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும். இனியும் தாமதிக்க கூடாது" என பதில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பினரும் சசிகலாவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், டிடிவி தினகரனின் நிலைப்பாடு இன்னும் தெரிவிக்கவில்லை எனவும் கூறுகின்றனர். ஜெயலலிதாவின் நினைவு தினத்தை வைத்து அதிமுகவிற்குள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் தொடர்ந்து பாஜகவை தொடர்பு கொண்டு இணைப்புக்கான பணிகளை அவ்வப்போது கூறிகொண்டே வருகிறார். சசிகலாவின் இந்த முயற்சி, இபிஎஸ் அணியினர் இடையே ஒரு விதமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவில் பிரிவும் இல்லை பிளவும் இல்லை’ ...முன்னாள் அமைச்சர் பொன்னையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.