ETV Bharat / state

Competitive Exams in TN: முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு அறிவிப்பு

author img

By

Published : Dec 31, 2021, 6:10 PM IST

Competitive Exams in TN: முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான கணினி வழியிலான போட்டித் தேர்வு ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போட்டித் தேர்வு
ஆசிரியர்கள் போட்டித் தேர்வு

Competitive Exams in TN: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1, முதுகலை கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் அக்டோபர் 17ஆம் தேதிவரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் தொடர் மழையின் காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தத் தேர்விற்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களில் 2020-21 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் கணினி மூலம் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

தற்பொழுது ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை (Availability of Examination Centre) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Emerald Lingam: தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத சிவலிங்கம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.