ETV Bharat / state

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 95 விழுக்காடு நிறைவு - மேயர் பிரியா

author img

By

Published : Sep 29, 2022, 9:50 PM IST

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் வரும் 10 தேதிக்குள் நிறைவடையும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 95 விழுக்காடு நிறைவு -மேயர் பிரியா தகவல்
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 95 விழுக்காடு நிறைவு -மேயர் பிரியா தகவல்

சென்னை: முன்னாள் மேயர் சிவராஜின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மிண்டு தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன், மழைநீர் வடிகால் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் சிங்கார சென்னையை இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையை பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 விழுக்காடு பணி நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாவது பகுதியை பொறுத்தவரை 35 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. கடந்தாண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பாதிக்கப்பட்டதோ அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதில் இன்னும் 5 விழுக்காடு பணிகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் அக்டோபர் 10 ஆம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். மேலும் வெள்ளப் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கும் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளும் அமைக்க படும்.இது தொடர்பாக மின்சாரத்துறை மற்றும் மெட்ரோ துறைக்கும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

இதையும் படிங்க:சென்னை கோட்டத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.