ETV Bharat / state

பிரபல தயாரிப்பு நிறுவன பெயரில் நூதன மோசடி - நிறுவனத்தின் இணை இயக்குநர் புகார்

author img

By

Published : Jun 22, 2023, 4:01 PM IST

பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, வி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து மர்ம கும்பல் ஒன்று பணமோசடி செய்து வருவதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜகதீசன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

v creations
v creations

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, வி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சென்னை - தியாகராய நகர் பிரகாசம் தெருவில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெறி, அசுரன், கபாலி உள்ளிட்டப் பல திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

அடுத்ததாக வி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம், வாடிவாசல். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கிறார்.

இந்த நிலையில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை எனக்கூறி பல லட்சங்களை மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்நிலையில் வி கிரியேசன்ஸ் பெயரை பயன்படுத்தி, சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜகதீசன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: Actor Dhanush : மீண்டும் பாலிவுட் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்! யார் கூட தெரியுமா?

அதில் வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெற்றி மாறன் இயக்க, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் என்ற புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும், அந்தப் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை எனவும்; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம்பெண்கள், பொதுமக்களிடம் விஷாலின் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என QR கோடு மூலமாக பணத்தை அனுப்பக்கூறியும், பிறகு சில நாட்கள் கழித்து நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் எனக்கூறி, அவர்களிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.

தொடர்ந்து பலரிடம் அந்தக் கும்பல் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும், இதில் பணத்தை இழந்த பொதுமக்கள் தங்களது நிறுவனத்தை நாடி புகார் தெரிவித்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டு வரும் அந்தக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற எந்தவிதமான அறிவிப்பையும் வி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்த நூதன மோசடி சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

5க்கும் மேற்பட்ட தொடர்பு எண்களை வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளதும், சில எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் , QR கோடு மூலமாக பணம் பெற்ற வங்கிக் கணக்கை கொண்டு அந்த மோசடி கும்பலை பிடிக்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற மோசடி கும்பலை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "எல்லா இடமும் நம்ம இடம்தான்": ஹிந்தி படத்தில் மீண்டும் தனுஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.