ETV Bharat / state

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்..!

author img

By

Published : Aug 12, 2023, 7:17 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தா. கார்த்திகேயன் இன்று ஆய்வு செய்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 738.22 கி.மீ. தொளைவில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வட சென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்துக்கு ரூ. 3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை 483.83 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. தென் சென்னை பகுதியின் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு KfW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியில் 1,714 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது.

இரண்டு கட்டங்களாக, எம்1 தொகுப்புத் திட்டத்தில் 160.83 கி.மீ. நீளத்துக்கு ரூ.597.48 கோடி மதிப்பீட்டில் 12 சிப்பங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 21.82 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. 2023ஆம் ஆண்டின் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வரும் பணி மற்றும் சிறு பழுதுபார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்பாக இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தா. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து சென்னை மாநகராட்சி வெயிட்ட செய்தி குறிப்பில், "திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67க்குட்பட்ட ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில், மூலதன நிதி ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைகளையும்.

எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு சாலையில் கொசஸ்தலை ஆறு வடிநில திட்டத்தின்கீழ் ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில்அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், பல்லவன் சாலையில் கொசஸ்தலை ஆறு வடிநில திட்டத்தின்கீழ் ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், அம்பேத்கர் கல்லூரி சாலையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியிகளையும், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்டஅண்ணா சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்க செயலாளர் தா.கார்த்திகேயன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவூறித்தனார்கள்." என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

  • இராயபுரம் மண்டலம், வார்டு-63, ஆதித்தனார் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.3.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் @RAKRI1, இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (1/3) pic.twitter.com/r6tGqWmwUH

    — Greater Chennai Corporation (@chennaicorp) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு... சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.