ETV Bharat / state

1 டன் கரும்புக்கு ரூ.4000: அரசு அறிவிப்பை அமல்படுத்த கோரிக்கை!

author img

By

Published : Feb 18, 2023, 10:37 AM IST

மாநில அரசு அறிவித்தப்படி ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்கிட வேண்டும் என்றும் கரும்பு ஆலைகள் முறைக்கேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற வங்கிக்கடனை ஆலையின் பெயரிலேயே மாற்றிட வேண்டும் என அரசிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கோட்டையை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (பிப்.17) போராட்டம் நடைபெற்றது. இதில், சேதமடைந்துள்ள சர்க்கரை ஆலைனையும் ஏலத்தில் வரும் சர்க்கரை ஆலையினை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து மாநில அரசு அறிவித்தபடி ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் ஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் பெயரில் போலியாக வங்கியில் பெற்ற வங்கிக்கடனை ஆலையின் பெயரிலேயே மாற்றி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையினை வலியுறுத்தினர்.

இதைனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாநில அரசு அறிவித்தப்படி ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்கிடவும், கரும்பு ஆலைகள் முறைக்கேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற வங்கிக்கடனை ஆலையின் பெயரிலேயே மாற்றிட வெண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாட்டில் மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் அதனை அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஹரியானா பஞ்சாப் மாநிலம் போன்று தமிழ்நாட்டிலும் கரும்பு விவசாயிகளே விலையை நிர்ணயிக்க வழிவகுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த நிலையில் இருக்கும் ஆலைகளை புனரமைக்க வேண்டும் எனவும் இதற்காக தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையாக வைத்தார்.

இதன் பிறகு ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பேரணியைத் தொடர்ந்ததால் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அண்ணா ஆடிடோரியம் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.