ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

author img

By

Published : Jul 14, 2021, 9:41 PM IST

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II -இன் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

http://10.10.50.85//tamil-nadu/14-July-2021/tn-che-01-cmrl-phase-works-cm-7208446_14072021203433_1407f_1626275073_67.jpg
http://10.10.50.85//tamil-nadu/14-July-2021/tn-che-01-cmrl-phase-works-cm-7208446_14072021203433_1407f_1626275073_67.jpg

சென்னை: மெட்ரோ ரயில் திட்ட முதல் கட்டத்தின் நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடப் பணிகளை விரைந்து செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் இயங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு குறித்தும், இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், முதல் கட்டத்தின் நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடப் பணிகளை விரைந்து செயல்படுத்திட அவர் அறிவுறுத்தினார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II -இன் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன்., சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் விபு நய்யர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.