ETV Bharat / state

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு..! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..

author img

By

Published : May 10, 2023, 10:52 PM IST

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு அளிக்க நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் மின்வாரிய ஊழியர்களுடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று (மே.10) நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக' தெரிவித்துள்ளார். சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக ஆட்சி அமைந்த பிறகு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறினார். இதற்காக 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும், 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 2019ஆம் ஆண்டு டிச.01 ஆம் தேதியன்று பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு ஆகும் என்றார். இதற்காக 603 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்ய உள்ள நிலையில் இதில், 75 ஆயிரத்துக்கும் மேலான பணியாளர்கள் பலன் பெறுவர் என்றார்.

இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை போராட்டம்; சிபிஎம்

இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2019 ஆம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு 01.04.2022 ஆம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும், 01.04.2022 முதல் 31.05.2023 வரை வழங்கப்பட வேண்டிய தொகையினை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71 கோடி ஆகும் என்றார்.

மேலும் 2019ஆம் ஆண்டு டிச.01 முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 28 மாதத்திற்கான தொகையில் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட 500 ரூபாய் வீதம் கணக்கிட்டு நிலுவைத் தொகை பணியாளருக்கும் தொகையாக தொகையினை மேற்குறிப்பிட்டவாறு இரு தவணைகளாக இந்நிலுவைத் வழங்கப்படும். இதற்காக 106 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75ஆயிரத்து 978 ஆகும்.

10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் எண்ணிக்கை 62ஆயிரத்து 548 பணியாளர்களின் வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘ஊழல் பண மழையில் RTO அலுவலகம்’ - பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.