ETV Bharat / state

'261 இடங்களில் நடத்திய ஆய்வில் ரூ. 1.43 கோடி அபராதமாக வசூல்' - அமைச்சர் மூர்த்தி

author img

By

Published : Aug 3, 2021, 6:40 PM IST

Updated : Aug 3, 2021, 6:52 PM IST

வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவின் தகவலின்படி, 261 இடங்களில் ஆய்வு செய்ததில் 1.43 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

சென்னை: எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூட்டரங்கில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வணிக வரித்துறை ஆணையர் சித்திக், செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் தகவலின்படி, போலியாக நிறுவனம் நடத்திய 261 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 1.43 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

moorthy
அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

போலி நிறுவனங்கள் பல செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கான ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதுபோன்ற போலி நிறுவனங்கள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த வாகனங்கள் சரியான வரி செலுத்தாததால் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தமாக 1.74 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் எல்லையில் கண்காணிக்கும் பறக்கும் படையின் எண்ணிக்கை 50லிருந்து 100ஆக உயர்த்தப்பட உள்ளது. 24 மணி நேரமும் வெளிமாநிலங்களில் இருந்து உரிய ஆவணங்களின்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மக்களின் பிரதிநிதி நான் - சைக்கிளில் பயணித்த ராகுல்

Last Updated : Aug 3, 2021, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.