ETV Bharat / state

ஐடி துறையில் 13 புதிய அறிவிப்புகள் - அறிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

author img

By

Published : May 4, 2022, 10:22 PM IST

தகவல் தொழில்நுட்பவியல் துறை, "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்" துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என சட்டப் பேரவையில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

tn assembly, தமிழ்நாட்டு சட்டப் பேரவை,அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்.

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அவர் பேசிய பொழுது தகவல் தொழில்நுட்பவியல் துறை இனி "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்" துறை என மறுபெயர் மாற்றப்படும் எனக்கூறினார்.

மேலும்,அமைச்சர் மனோ தங்கராஜ் 13 புதிய தொழில் நுட்பங்களைச் சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:

1. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை பிபிஎம் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான கொள்கை உருவாக்கப்படும்.

2. எல்கோசெஸ் கங்கைகொண்டான் மற்றும் திருநெல்வேலியில் ஆயத்த அலுவலக இடவசதி ரூபாய் 6 கோடி செலவில் நிறுவப்படும்.

3. எல்கோசெஸ் விஸ்வநாதபுரம் ஓசூரில் ஆயத்த அலுவலக இடவசதி ரூபாய் 6.86 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

4. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் 2.6 லட்சம் சதுர அடியில் ரூபாய் 150 கோடி செலவில் அமைக்கப்படும்.

5. தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

6. தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் செயல்படுத்துவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

7. தகவல் தொழில்நுட்பவியல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும்.

8. கணினி தமிழுக்கான மென்பொருள் ரூபாய் 2 கோடி செலவில் தமிழ் இணைய கல்வி கழகத்தால் செயல்படுத்தப்படும்.

9. முதுநிலை தமிழியல் படிப்பு ரூபாய் 29 லட்சம் செலவில் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தொடங்கப்படும்.

10. தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் ரூபாய் ஒரு கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

11. நூல்களில் மின்னுருவாக்கம் மற்றும் தமிழ் மின்நூலகத்திணை ஒரு கோடி செலவில் மேம்படுத்தி நவீனப்படுத்தப்படும்.

12. தமிழ்நாடு கலாசாரத்தின் நிலவரை ஏடு தொகுப்பு சுமார் ஒரு கோடி செலவில் தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்படும்.

13. கன்னியாகுமரியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் ரூபாய் 50 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் உரிய ஆய்விற்குப் பிறகு அமைக்கப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.