ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

author img

By

Published : May 19, 2023, 11:22 PM IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 2023-24ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வந்தப் பின்னர் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை பல் மருத்துவம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடப்பங்கீடு குறித்து கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தாெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 2022-23ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடப் பங்கீடு குறித்து விதிகளுக்குட்பட்டு ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு கல்வியாண்டிற்கு முன்னால் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக அரசிற்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கு உள்ள இடங்களின் பங்கீடு குறித்து விவாதிப்பது என்பது வாடிக்கையாகும். தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்டப் படிப்புகள் படிப்பதற்கு 18 சுயநிதி கல்லூரிகள், முதுநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 16 சுயநிதி கல்லூரிகள், இளநிலை மருத்துவம் படிப்பதற்கு 19 சுயநிதி கல்லூரிகள் மற்றும் இளநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 20 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 சிறுபான்மையினர் கல்லூரிகளாகும்.

அந்த வகையில் 2022-23ஆம் கல்வியாண்டில் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட இடப்பங்கீடு என்பது முதுநிலை பட்டப் படிப்பு அரசு ஒதுக்கீடு 407 இடங்கள், தனியார் ஒதுக்கீடு 385 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் பட்டப்படிப்பு அரசு 139 இடங்கள், தனியார் 157 இடங்கள் உள்ளன.

அதே போல் இளநிலை மருத்துவ பட்டப் படிப்பிற்கு அரசுக்கு 1739 இடங்கள், தனியார் கல்லூரிகளுக்கு 1311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளநிலை பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு அரசுக்கு 1410 இடங்கள், தனியார் கல்லூரிகளுக்கு 540 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இந்தாண்டு இடப் பங்கீடும் தொடரும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சுயநிதிக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் உடனடியாக கவுன்சிலிங் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுவாக ஒன்றிய அரசின் பங்கீடான 15 சதவீதம் இடஒதுக்கீடு அவர்களுக்கு முடிவுற்றதற்கு பிறகு தான் மாநில அரசுகள் கவுன்சிலிங் நடத்த இயலும். அதில் ஒன்றிய அரசின் சார்பில் கடந்த ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. இந்தாண்டு அது நடைபெறாது என்று கருதுகிறோம்.

ஜூன் முதல் வாரத்தில் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும், ஆயுஷ் அமைச்சரையும் சந்தித்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளின் தேவைகள் குறித்து பேச உள்ளோம். நீட் தேர்வு முடிவு வந்தவுடன் உடனடியாக ஒன்றிய அரசு 15 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் உடனடியாக முடித்து அந்தந்த மாநில அரசுகள் விரைந்து கவுன்சிலிங் நடத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை அளிக்கவுள்ளோம்.

ஜூன் முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவு வந்தவுடன் ஒன்றிய அரசு விரைந்து கால தாமதம் இல்லாமல் கலந்தாய்வு நடத்தும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கூலிப், ஹான்ஸ் இல்லையா..' பட்டா கத்தியைக் காட்டி அடாவடி செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.