ETV Bharat / state

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு... விரிவான விசாரணைக்கு உத்தரவு

author img

By

Published : Nov 22, 2022, 3:30 PM IST

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீதான லஞ்சப் புகார் குறித்த விசாரணையத் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aa
aa

சென்னை: பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகப் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவிப்பேராசிரியர்கள் பணி நியமனத்திற்காக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (நவ.22) நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில், யாரிடம் பணம் பெற்றது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்குத்தொடர்பாக, மற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் யாரிடமும் விசாரிக்கப்படவில்லை. உதவிப்பேராசிரியர்கள் நியமனமுறை வெளிப்படைத்தன்மையோடுதான் நடைபெற்றதாகவும், இந்த வழக்கு உள்நோக்கோடு பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என்ற பட்டியலை தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் மீதான புகார் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அரசு உத்தரவின்பேரிலேயே, சோதனை செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் மனுதாரர் முறைகேடு செய்தது மட்டுமில்லாமல், தகுதி இல்லாத நபர்களுக்குப் பணிகளை வழங்கி தகுதியுடைய நபர்களுக்கு பணியை மறுத்துள்ளார்.

இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும்; இல்லையென்றால், கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும் என்றும் சுட்டிக்காட்டி, தொடந்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடை - பொக்லைன் மூலம் இடித்த அதிகாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.