ETV Bharat / state

சென்னையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிறப்புபடை - உயர்நீதிமன்றம்

author img

By

Published : Nov 19, 2021, 8:03 PM IST

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை
சென்னை

சென்னை: சென்னையின் முக்கிய சாலையான ஜிஎஸ்டி சாலையில், உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இந்த நிறுவனங்களின் முன் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டை புதுவை நகர் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று (நவ.19) விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு (Police Commissioner) உத்தரவிட்டார்.

மேலும் வணிக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்த காவல் துறையினர் அனுமதிக்க கூடாது. விதிமீறும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்துச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதி அறிக்கை அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விவசாய சட்டங்கள் வாபஸ், பாஜகவுக்கு பலன் அளிக்காது- லாலு பிரசாத் யாதவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.