ETV Bharat / state

சதுப்பு நிலத்திலுள்ள மின் கோபுரங்களை அகற்றி, ரயில் தூண்கள் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Apr 6, 2023, 10:52 PM IST

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் உள்ள மின் கோபுரங்களை அகற்றவும், மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கவும் அனுமதி அளிக்கும்படி தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதுப்பு நிலத்திலுள்ள மின் கோபுரங்களை அகற்றி, ரயில் தூண்கள் அமைக்க MHC உத்தரவு
சதுப்பு நிலத்திலுள்ள மின் கோபுரங்களை அகற்றி, ரயில் தூண்கள் அமைக்க MHC உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் உள்ள மின் கோபுரங்களை அகற்றவும், மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கவும் அனுமதி அளிக்கும்படி தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை 63ஆயிரத்து 246 கோடி ரூபாயில் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆலந்தூர் - சோழிங்கநல்லூர் வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித் தடம் செயல்படுத்தப்பட உள்ளது. மேல்மட்ட வழித்தடமாக அமைக்கப்பட உள்ள இந்த வழித்தடத்தில் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்கள் உள்ளதால் மெட்ரோ திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் உள்ள மின் கோபுரத்தை அகற்றவும்; பூமிக்கு அடியில் மின் கம்பிகளை மாற்ற அனுமதிக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிடக்கோரி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, வனம் சார்ந்த பணிகளை தவிர மற்ற பணிகளை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாகவே அனுமதி அளிக்கவில்லை எனக் கூறினார்.

இதையடுத்து, மின்கம்பியை மாற்றி அமைக்கும் பணி ஒருமுறை மட்டுமே நடைபெற உள்ளதால் சதுப்பு நிலத்திற்குப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பதால், பொது நலனைக் கருத்தில் கொண்டு, மின் கோபுரங்களை அகற்றி கம்பியை பூமிக்கு அடியில் கொண்டு செல்லவும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான கோபுரங்களை அமைக்கவும் அனுமதி அளிக்கும்படி முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகை: தாம்பரத்தில் 4,000 போலீசார் பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.