ETV Bharat / state

‘ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது’

author img

By

Published : Dec 14, 2021, 3:21 PM IST

பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் பெண்களுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களுக்கு வழங்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் கூறியுள்ளார்.

மகப்பேறு விடுப்பு
மகப்பேறு விடுப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பள்ளிக் கல்வித் துறையில் சமக்ர சிக்ஷா (அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வி) திட்டத்தில் பணியாற்றிவரும் தொகுப்பூதிய பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 2021 ஜனவரி 2 முதல் வழங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது.

மருத்துவரின் சான்றிதழ் அளிப்பதன் அடிப்படையில் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கலாம். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்றி இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். அவர்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து எந்தவிதமான தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.53.23 லட்சம் மதிப்பில் வேளாண் துறைக்குப் புதிய கார்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.